24.9 C
Jaffna
December 17, 2024
Pagetamil
உலகம்

100 நாட்களை கடந்த உக்ரைன் போர்: மேற்கு தடைகளின் மத்தியிலும் ‘கல்லா கட்டும்’ ரஷ்ய கச்சா எண்ணெய் வியாபாரம்!

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு 100 நாட்களைத் தாண்டியுள்ளது. அமெரிக்கா மற்றும் முக்கிய ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத் தடைகள் ரஷ்ய பொருளாதாரத்திற்கு நிறைய சேதங்களை ஏற்படுத்தியுள்ளன. தற்போதைய நெருக்கடியால், பல நாடுகள் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இறக்குமதியை நிறுத்த முடிவு செய்துள்ளன. இருப்பினும், ஃபின்லாந்தை தளமாகக் கொண்ட ஆற்றல் மற்றும் சுத்தமான காற்றுக்கான ஆராய்ச்சி மையம் (CREA) நடத்திய ஆய்வின்படி, உக்ரைனில் போர் தொடங்கியதில் இருந்து மொத்த வருவாயில் 98 பில்லியன் டொலர்களுடன் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வதில் ரஷ்யா முதலிடத்தில் உள்ளது தெரிய வந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் முதன்மையான இறக்குமதியாளராக உள்ளது.

உக்ரைனில் போர் தொடங்குவதற்கு முன்பு, ரஷ்யா ஐரோப்பிய ஒன்றியத்தின் எரிவாயுவில் 40 சதவீதத்தையும், இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெயில் 27 சதவீதத்தையும் கொண்டிருந்தது. எவ்வாறாயினும், நெருக்கடி தொடங்கியதிலிருந்து, ஐரோப்பிய ஒன்றியம் அவற்றின் இறக்குமதியைக் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது,  ரஷ்ய எரிபொருள், எரிவாயுவிற்கு முழுமையான தடைவிதிக்க வேண்டுமென உக்ரைன் தொடர்ந்து கோரினாலும் இன்னும் முழுமையான தடை விதிக்கப்படவில்லை.

ஐரோப்பிய நாடுகள் மற்றுமின்றி இந்தியா, சீனா போன்ற ஆசிய நாடுகளும் ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருகின்றன.

போர் தொடங்குவதற்கு முன் ஐரோப்பிய நாடுகளில் அதன் 40 சதவீகித எரிவாயு தேவை மற்றும் 27 சதவீகித கச்சா எண்ணெய் தேவையை ரஷ்யாவிடமிருந்து கொள்முதல் செய்தன. ஆனால், போர் தொடங்கிய பின்னர் ரஷ்யாவின் எரிவாயு, கச்சா எண்ணெயில் 61 சதவீகிதம் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, ஒட்டுமொத்தமாக ரஷ்யாவிடமிருந்து முறையே சீனா (13.2 பில்லியன் அமெரிக்க டொலர்), ஜெர்மனி (12.7 பில்லியன் அமெரிக்க டொலர்), இத்தாலி (8.2 பில்லியன் அமெரிக்க டொலர்), நெர்தர்லாந்து (8.4 பில்லியன் அமெரிக்க டொலர்), துருக்கி (7 பில்லியன் அமெரிக்க டொலர்), போலாந்து (4.6 பில்லியன் அமெரிக்க டொலர்), பிரான்ஸ் (4.5 பில்லியன் அமெரிக்க டொலர்), இந்தியா (3.6 பில்லியன் அமெரிக்க டொலர்) அளவிற்கு கச்சா எண்ணெய்யை கொள்முதல் செய்துள்ளன.

இதன் மூலம் ஒட்டுமொத்தமாக போர் தொடங்கிய முதல் 100 நாட்களில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி மூலம் ரஷ்யா 99 பில்லியன் அமெரிக்க டொலர்கள் சம்பாதித்துள்ளது என பின்லாந்தை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் எரிபொருள் மற்றும் தூய காற்று ஆராய்ச்சி மையம் தனது ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் வருமானம் கச்சா எண்ணெயில் 48.2 பில்லியன் அமெரிக்க டொலர்,  குழாய் எரிவாயு 25.1 பில்லியன் அமெரிக்க டொலர், எண்ணெய் பொருட்கள் 13.6 பில்லியன் அமெரிக்க டொலர், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு 5.3 பில்லியன் அமெரிக்க டொலர் மற்றும் நிலக்கரி 4.8 பில்லியன் அமெரிக்க டொலர் ஆகியவற்றில் இருந்து வந்தது என்றும் அறிக்கை கூறியது.

ரஷ்யாவால் ஏற்றுமதி செய்யப்படும் எண்ணெய் மற்றும் எரிவாயுவின் அளவு அந்தக் காலகட்டத்தில் குறைந்தாலும், ரஷ்யாவின் வருமானம் பாதிக்கப்படவில்லை. காரணம், எரிபொருள் விலைகள ரஷ்யா அதிகரித்தது. கிட்டத்தட்ட 60 சதவீதம் விலை அதிகரித்தது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

420Kg நபரின் இறுதிச்சடங்கிற்கு உதவிய தீயணைப்புத்துறை!

Pagetamil

இந்த நூற்றாண்டின் மோசமான சூறாவளியால் சின்னாபின்னமான பிரான்ஸ் தீவு: ஏராளமானவர்கள் பலி!

Pagetamil

ஈரானின் ஏவுகணை எரிபொருள் உற்பத்தியை குறைத்த இஸ்ரேல் தாக்குதல்

Pagetamil

இராணுவச் சட்டம் அமல் எதிரொலி: தென்கொரிய ஜனாதிபதி பதவி நீக்கத்துக்கு ஆதரவாக எம்.பி.கள் வாக்களிப்பு

Pagetamil

பல இலட்சம் கோடி சொத்தை உதறிவிட்டு பௌத்த பிக்குவான இலங்கைத் தமிழரின் மகன்!

Pagetamil

Leave a Comment