மக்கள் கேட்பது உணவு; அரசியலமைப்பு திருத்தமல்ல: ரணிலிடம் தெரிவித்தது ‘மொட்டு’!

Date:

நாட்டின் பொருளாதார பிரச்சினைகளுக்கு அதிக முன்னுரிமை வழங்குவதற்கு பதிலாக அரசியலமைப்பு திருத்தங்களை கொண்டு வர முயற்சிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று பிரதமரிடம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்று பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே குறித்த குழுவினர் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

இந்த சந்திப்பில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் விமலவீர திஸாநாயக்க, அரசியலமைப்பு திருத்தங்கள் மூலம் அம்பாறை மக்களின் உரப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படுமாயின் அவ்வாறானதொரு விடயம் கொண்டுவரப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மக்கள் கேட்பது அரசியலமைப்பு திருத்தங்களை அல்ல மாறாக வயிற்றுக்கு உணவு மற்றும் உரம் மட்டுமே என்றார்.

நீதியமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, பவித்ரா வன்னியாராச்சி, ரோஹித அபேகுணவர்தன ஆகியோரும் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

spot_imgspot_img

More like this
Related

பராகுவேவின் ஜனாதிபதி பதவி நீக்கம்!

ஒரு டிஜிட்டல் வங்கியின் வீழ்ச்சியால் தூண்டப்பட்ட, வேகமாக மாறிவரும் அரசியல் மற்றும்...

சத்தியாகிரகத்தில் ஈடுபடுவோர் வெளியேற நீதிமன்றம் உத்தரவு

அனுராதபுரம் - ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த...

வடக்கு, கிழக்கு பாடசாலைகளுக்கு திங்கட்கிழமை விடுமுறை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அதற்கு மறுநாளான திங்கட்கிழமை (9) வடக்கு மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்