25.5 C
Jaffna
January 27, 2025
Pagetamil
கிழக்கு

கல்குடாவில் டெங்கு ஒழிப்பு சிரமதானம்!

மட்டக்களப்பு வாழைச்சேனை பொது சுகாதாரப் பிரிவின் கல்குடாவில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதனால் அதனை கட்டுப்படுத்தும் முகாமாக சிரமதானப் பணி மேற்கொள்ளப்பட்டது. பிரதேச மக்கள்,சமூக அமைப்புக்கள் மற்றும் சமூர்த்தி உதவி பெறும் குடும்பங்கள் என பலரும் ஒண்றினைந்து இதனை முன்னெடுத்தனர்.

பிரதேசத்தின் வெற்றுக் காணிகள்,பாடசாலைகள்,ஆலயங்கள் மற்றும் பொது இடங்களில் காணப்பட்ட கழிவுப் பொருட்கள்,வெற்றுப் போத்தல்கள் என்பன சேகரிக்கப்பட்டு அகற்றப்பட்டன. இதன்போது இவ் நோயின் தாக்கம் தொடர்பாக கருத்துக்கள் அடங்கிய விழிப்புணர்வு உரை பொதுச்சுகாதார பரிசோதகரால் நிகழ்த்தப்பட்டது.

கல்குடாவில் 10 இற்கு மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாக பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தகவல் தெரிவிக்கின்றனர். இந் நடவடிக்கையில் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி ஜே.யசோதரன், பிரதேச சபை உறுப்பினர் புஸ்பேந்திரன், கிராமசேவகர் க.கிருஷ்ணகாந்தன், சமூர்த்தி உத்தியோகஸ்த்தர் மா.காளிராஜா ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அறிவு ஒளி மையத்தின் அரிய செயல்

east tamil

வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தினரால் ஊடக சந்திப்பு!

east tamil

வாழைச்சேனையில் குழு மோதல் – பலர் வைத்தியசாலையில் அனுமதி

east tamil

ஏறாவூர்ப்பற்று பிரதேசங்களில் மாட்டு கொள்ளை – இருவர் கைது!

east tamil

திருகோணமலையில் Graphic Designing வகுப்புகள் ஆரம்பம்

east tamil

Leave a Comment