26.8 C
Jaffna
December 13, 2024
Pagetamil
முக்கியச் செய்திகள்

துமிந்த சில்வாவிற்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பை இடைநிறுத்தியது உயர் நீதிமன்றம்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்வதற்கு இடைக்கால தடையுத்தரவு ஒன்றை உயர் நீதிமன்றம் இன்று (31) பிறப்பித்துள்ளது.

இதன்படி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரை உடனடியாக கைது செய்யுமாறு உயர் நீதிமன்றம் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவு பிறப்பித்தது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் வெளிநாட்டுப் பயணத்திற்கு இடைக்காலத் தடை விதித்து, கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைப்பதற்கும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் அவரது தாயார் சுமனா பிரேமச்சந்திர உள்ளிட்ட மூவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு நீதியரசர்களான யசந்த கோதாகொட, பிரீத்தி பத்மன் சூரசேன மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழில் தொடர் உயிரிழப்புக்களுக்கு எலிக்காய்ச்சலே காரணம்: பரிசோதனையில் உறுதியானது!

Pagetamil

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்கள் ஒதுங்கி, புதியவர்களுக்கு வழிவிட யோசனை: புதிய அணிகள் இணைய பேச்சு!

Pagetamil

சிரியா முன்னாள் ஜனாதிபதி அசாத் பற்றிய மர்மம் விலகியது: ரஷ்யா புகலிடம் அளித்துள்ளது!

Pagetamil

சிரியா தலைநகரும் கிளர்ச்சியாளர்களிடம் வீழ்ந்தது: அசாத் குடும்பத்தின் 50 ஆண்டுகால ஆட்சி முடிந்தது!

Pagetamil

திருத்தப்பட்ட அரசி விலைகள் அறிவிப்பு!

Pagetamil

Leave a Comment