Pagetamil
உலகம் முக்கியச் செய்திகள்

நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரித்தானிய பிரதமர் வெற்றி!

பிரிட்டிஷ் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தமது ஆளும் கன்சர்வெடிவ் கட்சி ஆரம்பித்த நம்பிக்கைத் தீர்மான வாக்கெடுப்பில் வெற்றிபெற்றிருக்கிறார்.

அவர் தொடர்ந்து அந்தக் கட்சியின் தலைவராக இருப்பார்.

211 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர் தொடர்ந்து கட்சித் தலைவராக நீடிப்பதை ஆதரித்து வாக்களித்தனர். ஆனால் 148 பேர் அவருக்கு எதிராக வாக்களித்தனர்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்திருந்தால் ஜோன்சன் கட்சித் தலைவர் பொறுப்பையும் பிரதமர் பதவியையும் இழந்திருப்பார்.

குறைந்த வாக்கு எண்ணிக்கையில் வெற்றிபெற்றபோதும் அவர், அதை வலுவான வெற்றி என்று குறிப்பிட்டார்.

நாட்டில் திடீர்த் தேர்தல் நடத்தும் திட்டம் எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் 2020-21க்கு இடைப்பட்ட காலத்தில் COVID-19 முடக்கநிலை நடப்பில் இருந்தது. அப்போது உயிரிழந்தோரின் இறுதிச் சடங்கில்கூடப் பங்கேற்கப் பொது மக்களுக்கு அனுமதி இல்லாமல் இருந்தது.

அவ்வேளையில் பிரதமரின் டவ்னிங் ஸ்ட்ரீட் அலுவலகம், அதன் தோட்டப்பகுதிகள், மற்ற அரசாங்க அலுவலகங்களில் பல விருந்து நிகழ்ச்சிகள் நடந்ததாகக் கூறப்படுகிறது.

அவற்றில் குறைந்தது மூன்று விருந்து நிகழ்ச்சிகளில் பிரதமர் ஜோன்சன் கலந்து கொண்டதாக வந்த செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சுனாமி 20 வது ஆண்டு: இன்று தேசிய பாதுகாப்பு தினம்!

Pagetamil

ஆப்கானிஸ்தானுக்குள் திடீர் வான் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்

Pagetamil

பறவை மோதியதால் விபரீதமா?: பயணிகள் விமானம் விபத்து; ஏராளமானவர்கள் பலி!

Pagetamil

ஜனாதிபதியாக இருந்தால்தான் கணவன்: சிரியாவிலிருந்து தப்பியோடிய ஆசாத்திடமிருந்து விவாகரத்து கோரும் மனைவி!

Pagetamil

ஹட்டனில் பஸ் விபத்தில் 3 பேர் பலி

east tamil

Leave a Comment