வாகன வகைகளின் அடிப்படையில் எரிபொருள் நிரப்ப விதிக்கப்பட்ட வரையறைகள் மீண்டும் ஒருமுறை திருத்தப்பட்டுள்ளன.
கொழும்பில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இன்று காலை எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து இந்த வரையறைகள் திருத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதன்படி, மோட்டார் சைக்கிள்களுக்கு பம்ப் 2,500 ரூபாயும், முச்சக்கர வண்டிகளுக்கு 3,000 ரூபாயும், கார்கள், வேன்கள் மற்றும் SUV களுக்கு 10,000 ரூபாயும் பெறுமதியான எரிபொருள் வழங்கப்படும்.
எவ்வாறாயினும், டீசல் தேவைப்படும் பஸ்கள், லொறிகள் மற்றும் வர்த்தக வாகனங்களுக்கு எரிபொருள் வரையறை விதிக்கப்பட மாட்டாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் முன்னர் அறிவித்திருந்தது.
எரிபொருள் வழங்கும் போது, எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் வாகனங்கள் பற்றிய தகவல் ஆவணத்தை பராமரிக்க வேண்டும் என்று பெற்றோலிய கூட்டுத்தாபனம கூறியது.