இன்று (24) அதிகாலை 3 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, புதிய எரிபொருள் விலைகள் வருமாறு:
பெட்ரோல் ஒக்டேன் 92 – லிட்டருக்கு ரூ. 83 அதிகரித்து, ரூ420க்கு விற்கப்படும்.
பெட்ரோல் ஒக்டேன் 95 – லிட்டருக்கு ரூ.77 அதிகரித்து ரூ. 450க்கு விற்கப்படும்.
ஆட்டோ டீசல் – லிட்டருக்கு ரூ. 111 அதிகரித்து ரூ.400க்கு விற்கப்படும்.
சூப்பர் டீசல் – லிட்டருக்கு ரூ.116 அதிகரித்து ரூ. 445க்கு விற்கப்படும்.
எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர விடுத்துள்ள அறிக்கை
இன்று அதிகாலை 3 மணி முதல் எரிபொருள் விலை திருத்தம் செய்யப்படவுள்ளது. அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட எரிபொருள் விலைச்சூத்திரம் விலைகளை திருத்துவதற்கு பயன்படுத்தப்பட்டது.
விலை திருத்தம் இறக்குமதி, இறக்குதல், நிலையங்களுக்கு விநியோகம் மற்றும் வரி ஆகியவற்றில் ஏற்படும் அனைத்து செலவுகளையும் உள்ளடக்கியது. இலாபங்கள் கணக்கிடப்படவில்லை மற்றும் சேர்க்கப்படவில்லை. அதற்கேற்ப போக்குவரத்து மற்றும் இதர சேவைக் கட்டணங்களை திருத்தவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கும் அல்லது மாதந்தோறும் சூத்திரம் பயன்படுத்தப்படும்.
க.பொ.த சா/த பரீட்சார்த்திகளுக்கு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாதவாறு மற்றும் கட்டணங்களை மீள்திருத்தம் செய்வது குறித்து கலந்துரையாடுமாறு போக்குவரத்து துறையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிறுவன தலைவரின் வழிகாட்டுதலின்படி அரச ஊழியர்கள் இன்று முதல் பணிபுரிய அழைக்கப்படுவார்கள். எரிபொருளின் பயன்பாட்டைக் குறைக்கவும், எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்கவும் வீட்டிலிருந்து வேலை செய்வது ஊக்குவிக்கப்படும்.