முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்திற்குற்பட்ட பறங்கியாற்றில் அனுமதிபத்திர விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மணல் அகழ்வில் ஈடுபட்ட இரு உழவு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டதுடன், அதன் சாரதிகள் இருவரும் நட்டாங்கண்டல் பொலிசாரினால் இன்று மாலை செய்யப்பட்டுள்ளனர்
விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இரு உழவு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டு, சாரதிகளும் கைதாகியுள்ளனர்
உழவு இயந்திரங்கள் இரண்டும் நட்டாங்கண்டல் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், சாரதிகள் இருவரையும் பொலிஸ் பிணையில் செல்ல அனுமதித்த பொலிசார் எதிர்வரும் 25ம் திகதி குறித்த வழக்கை மாங்குளம் நீதிவான் நீதிமன்றில் பாரப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1