கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று (12) காலை 9.30 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளது.
கட்சித் தலைவர்கள் கூட்டம் நேற்று சூம் மூலம் கூட்டப்பட்டது. எனினும், அதில் அனைத்து தலைவர்களும் பங்கேற்கவில்லை. வீடுகள் எரிக்கப்பட்டதால், ஒரு கட்சியின் தலைவரின் கணினி வசதிகளும் எரிக்கப்பட்டதால், தன்னால் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாதென அறிவித்திருந்தார்.
நாடாளுமன்றம் மீண்டும் மே மாதம் 17ஆம் திகதி கூடும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கடந்த வாரம் அறிவித்திருந்தார்.
இதற்கிடையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பதவி விலகல் காரணமாக விவாதத்தில் பங்கேற்கப் போவதில்லை என சபைத் தலைவர் தினேஷ் குணவர்தன, அரசாங்கத்தின் பிரதம கொறடா பிரசன்ன ரணதுங்க மற்றும் அரசாங்க உறுப்பினர்கள் பலர் சபாநாயகரிடம் அறிவித்துள்ளனர்.
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், அவர்களது வீடுகளுக்கும், அலுவலகங்களுக்கும் போதிய பாதுகாப்பு வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறும் சபாநாயகரிடம் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.