சக மாணவியை வீடியோ எடுத்து மிரட்டி துஷ்பிரயோகம் செய்த 15 வயது மாணவர்கள் இருவர் கைது!

Date:

15 வயதான மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சக மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கெக்கிராவ பகுதியிலுள்ள பாடசாலையொன்றி, தரம் 10 இல் மாணவியுடன் ஒரே வகுப்பில் கல்வி பயிலும் மாணவர்களே  கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவி அதே வகுப்பிலுள்ள இன்னொரு மாணவருடன் பேசி வருகிறார். அதை இரகசியமாக வீடியோ செய்த மாணவர்கள், அந்த மாணவியை மிரட்டியுள்ளனர்.

தாம் சொல்வதை போல நடக்க வேண்டுமென்றும், இல்லையென்றால் வீீடியோவை மாணவியின் வீட்டிற்கு காண்பிப்போம் என மிரட்டியுள்ளனர்.

சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த மாணவி, தனது சகோதரியின் பராமரிப்பில் வளர்கிறார்.  விடயம் சகோதரிக்கு தெரிந்து விடக்கூடாது என்ற அச்சத்தில், மாணவர்களின் சொற்படி மாணவி செயற்பட்டுள்ளார்.

அவரை தனிமையான பகுதிக்கு அழைத்து சென்று சில தடவைகள் துர்நடத்தையில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவத்தை அறிந்த மாணவியின் சகோதரி, கெக்கிராவ கெக்கிராவா பொலிஸின் குழந்தைகள் மற்றும் மகளிர் பணியகத்தில் முறையிட்டார். பொறுப்பதிகாரியான உப பொலிஸ் பரிசோதகர் இந்திராணி துரிதமாக செயற்பட்டு மாணவர்கள் இருவரையும் கடந்த 25ஆம் திகதி கைது செய்தார். துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுமி கெக்கிராவ மாவட்ட மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த கெக்கிராவ மாவட்ட நீதிவான் கே.கே.ராணியகொட, மாணவர்கள் இருவரையும் அநுராதபுரம் அபயா சிறுவர் இல்லத்தின் தங்க வைக்க உத்தரவிட்டதுடன், வரும் 31ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

சீன தயாரிப்பு லேபிள்களை ஒட்டி மோசடி: தெஹிவளையில் அம்பலமான காலணி மோசடி!

தெஹிவளை, கவ்தானாவில் உள்ள ஒரு ரகசிய காலணி உற்பத்தி மற்றும் அசெம்பிளி...

கை,கால் நடுங்க தூக்கி வரப்பட்ட மஹிந்த: மரணிக்கும் முன் நாமலை ஜனாதிபதியாக்க வேண்டுமாம்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ‘ஜன சதன’ (மக்கள் போராட்டம்)...

அராலிச்சந்தி வாள்வெட்டு: நால்வர் கைது!

ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்