2022 ஊடக சுதந்திர தரப்படுத்தலில் இலங்கை 146வது இடம்!

Date:

எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பின் 2022ஆம் ஆண்டிற்கான ஊடக சுதந்திர தரப்படுத்தலில் இலங்கை 146வது இடத்தைப் பெற்றுள்ளது.

2021 தரப்படுத்தலில் 127 வது இடத்தில் இருந்த இலங்கை, இந்த வருட தரப்படுத்தலில் 19 இடங்கள் வீழ்ச்சியடைந்துள்ளது.

180 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் ஊடகத் துறையின் நிலையை மதிப்பிடும் உலக ஊடக சுதந்திரக் குறியீட்டின் 2022 ஆம் ஆண்டு பதிப்பு வெளியாகியுள்ளது.

இலங்கையில் ஊடக சுதந்திர பிரச்சனைகள் மோதலுடன் நெருக்கமாக பிணைந்துள்ளதாக எல்லைகளற்ற ஊடகவிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.

பன்முகத்தன்மை இல்லாத மற்றும் பிரதான அரசியல் அணிகளை சார்ந்துள்ள ஊடகத் துறையின் காரணமாக, ஊடகத்துறை ஆபத்தில் இருப்பதாக இலங்கை பற்றிய அறிக்கை கூறியுள்ளது.

ஐந்தில் ஒரு இலங்கை பிரஜைகளே அரசியல் ரீதியில் சுதந்திரமான ஊடகங்களை அணுகக்கூடியவர்கள் என்று அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

உலகின் மிக மோசமான ஊடக சுதந்திரத்திற்கான நாடுகளில் மியான்மர் (176வது), சீனா (175வது), துர்க்மெனிஸ்தான் (177வது), ஈரான் (178வது), எரித்திரியா (179வது) மற்றும் வடகொரியா (180வது) ஆகியவை பட்டியலிடப்பட்டுள்ளன.

ஊடக சுதந்திரத்தில் முன்னிலையில் உள்ள- கருத்து சுதந்திரம் மிக்க நாடுகளாக நோர்வே, டென்மார்க் மற்றும் ஸ்வீடன் தரப்படுத்தப்பட்டுள்ளன.

spot_imgspot_img

More like this
Related

கொழும்பு தேசிய வைத்தியசாலை இயல்புக்கு திரும்பியது!

கொழும்பு தேசிய மருத்துவமனையில், பலத்த மழையினால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கின் காரணமாகச்...

முன்னாள் காதலி இப்போது என்ன செய்கிறாள்? – தகவல் அறியும் சட்டத்தில் 1,886 கேள்விகள் கேட்ட இளைஞர்

விழுப்புரம் மாவட்​டத்​தைச் சேர்ந்த சந்​தோஷ் (22) என்​பவர், கடந்த 2021-2024 ஆண்​டுகளில்...

பட்டினியால் இறந்து சொர்க்கம் செல்லலாமென கூறி 190 பேரை கொன்ற மதகுருவுக்கு 200 வருட சிறை

கென்யாவின் ஷாகஹோலா வனப்பகுதியில் பட்டினி கிடந்து உயிரிழக்கத் தூண்டிய மதக் குழுவின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்