26.3 C
Jaffna
January 31, 2025
Pagetamil
உலகம்

30 வருடங்களாக மலசலகூடத்தில் உணவு சமைத்த உணவத்தை கூட உத்தரவு!

சவுதி அரேபியாவில் 30 ஆண்டுகளாகக் கழிவறையில் சமோசாக்களைப் பொரித்து விற்று வந்த உணவகத்தை உடனடியாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜெட்டா நகரில் உள்ள அந்த உணவகம் சமோசாவையும் இதர உணவுகளையும் கழிவறையில் வைத்துப் பொரித்தது அண்மையில் தெரியவந்தது.

ஊடகங்களில் இந்த விவகாரம் வெளியானதையடுத்து, ஜெட்டா நகராட்சி நடத்திய சோதனையில் உணவகம் பிடிபட்டது.

மேலும் உணவகம் காலாவதியான இறைச்சி, பாலாடைக் கட்டி ஆகியவற்றைப் பயன்படுத்தியதும் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.

உணவகத்தில் பூச்சிகளும் தென்பட்டன.

அங்கு பணிபுரிந்த ஊழியர்களிடம் சுகாதாரச் தரச் சான்றிதழ்கள் இல்லை. அவர்கள் சவுதி அரேபியாவின் தங்கும் விதிமுறைகளை மீறியிருக்கின்றனர்.

உணவகத்தை உடனடியாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கு முன் ஜனவரி மாதம், சவுதி அரேபியாவின் பிரபல உணவகம் ஒன்றில் குச்சியில் குத்திச் சுடப்படும் இறைச்சியை எலி சுற்றித் திரிந்து சுவைக்கும் காணொளி பரவியதை அடுத்து, அந்த உணவகம் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘வில்லனை அடித்து ஹீரோவாக வேண்டுமா… என்னை அழைப்பீர்!’ – அடிவாங்கி சம்பாதிக்கும் மலேசிய இளைஞர்

Pagetamil

அமெரிக்காவில் பயணிகள் விமானம் விபத்து – 60 பேர் உயிரிழப்பு

east tamil

Update – வொஷிங்டன் விமான விபத்தில் 19 சடலங்கள் மீட்பு

east tamil

வாஷிங்டனில் விமானத்தை மோதிய ஹெலி

east tamil

இஸ்ரேல் பிரதமருக்கு ட்ரம்பின் அழைப்பு

east tamil

Leave a Comment