27.2 C
Jaffna
February 7, 2025
Pagetamil
இலங்கை

ஜனாதிபதி, அரசு பதவிவிலகாவிட்டால் வரி செலுத்துவதை நிறுத்த தயாராகும் தொழில் வல்லுனர்கள்!

அரசாங்கம் தொடர்ந்தும் மக்களின் கோரிக்கைகளை உதாசீனப்படுத்தினால், வரி செலுத்துவதை நிறுத்தப் போவதாக தொழில் வல்லுநர்கள் எச்சரித்துள்ளதாக  நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எச்சரித்துள்ளார்.

ஆளும் கூட்டணியிலிருந்து பிரிந்த 11 அரசியல் கட்சிகளுக்கும் தொழில் வல்லுனர்கள் குழுவிற்கும் இடையில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஜயசேகர இவ்வாறு தெரிவித்தார்.

தற்போதைய நிர்வாகத்தில் ஏற்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பான ஐந்து அடிப்படை கோரிக்கைகளை நிபுணர்கள் குழு முன்வைத்தது.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கம் உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும் மற்றும் அரசியலமைப்பின் 21 வது திருத்தத்தை அறிமுகப்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

முன்மொழிவுகள் குறித்து நீண்ட நேரம் விவாதித்ததாக அவர் கூறினார். தொழில் வல்லுநர்கள் வரி செலுத்துவதைத் தவிர்த்துவிட்டு, தொடர்ந்தும் பொதுப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக இறுதி எச்சரிக்கை விடுத்ததாக எம்.பி. ஜெயசேகர கூறினார்.

பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கான முன்மொழிவுகளை தொழில் வல்லுநர்கள் முன்வைத்துள்ளார்களா என ஊடகவியலாளர்கள் வினவியபோது, ​​பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கு முன்னர் நிர்வாகத்தில் மாற்றத்தை தொழில் வல்லுநர்கள் கோருவதாக தெரிவித்தார்.

தற்போதைய நிர்வாகத்தில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பது வீண் என்று தொழில் வல்லுநர்கள் கருதுகின்றனர் என்றார்.

இதேவேளை, நிலவும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணுமாறு தொழில் வல்லுநர்கள் கோரிக்கைகளை முன்வைத்ததாக பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார்.

எதிர்காலத்தில் 11 அரசியல் கட்சிகளுக்கிடையில் இந்த முன்மொழிவுகள் கலந்துரையாடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவும் நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதில் மருத்துவர்கள், சட்டத்தரணிகள் மற்றும் ஏனைய தொழில் வல்லுநர்கள் கைகோர்த்து வருவது குறிப்பிடத்தக்கது எனவும், முன்னேற்றத்தை அடைவதற்கான சாதகமான ஆரம்பம் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் யாப்பா தெரிவித்தார்.

நிலைமையைச் சமாளிப்பதற்குத் தேவையான அரசியல் கட்டமைப்பை உருவாக்குவதே தமது நோக்கம் எனக் கூறும் பொது மக்கள் பொருளாதார வீழ்ச்சியின் ஆழத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

GovPay ஆரம்பம்

east tamil

கிளிநொச்சியில் பால்நிலை வன்முறையால் பாதிக்கப்பட்டோர் சேவை நிலையங்களுக்கான கள விஜயம்

east tamil

A9 வீதியில் திடீரென தீப்பற்றிய மோட்டார் சைக்கிள்

east tamil

ரஷ்ய இராணுவத்தில் இணைந்த 59 இலங்கையர்கள் பலி

Pagetamil

வட்டுக்கோட்டையில் நூதன கொள்ளை

east tamil

Leave a Comment