25.6 C
Jaffna
February 22, 2025
Pagetamil
இலங்கை

இன்று லிட்ரோ எரிவாயு விலை அதிகரிக்கலாம்!

எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்துவது குறித்து இன்று முடிவு எடுக்கப்பட உள்ளது.

எரிவாயு சிலிண்டர்களின் விலையை அதிகரிக்குமாறு லிட்ரோ எரிவாயு நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன உறுதிப்படுத்தியுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த அமைச்சர் பத்திரன, செலவு அதிகரிப்பு காரணமாக உடனடியாக விலை அதிகரிப்பு தேவை என நிறுவனம் சுட்டிக்காட்டியதாக தெரிவித்தார்.

நிறுவனத்தின் நிதி ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் வகையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

எவ்வாறாயினும், எரிவாயு விலையை அதிகரிப்பதற்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

எரிவாயு இறக்குமதி மற்றும் ஏனைய செலவுகள் தொடர்பிலான அறிக்கைகள் இன்று ஆராயப்பட்டு தீர்மானம் அறிவிக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதற்கிடையில், லிட்ரோ எரிவாயு நிறுவனம் புதிய எல்பி எரிவாயு சிலிண்டர் விலையை இன்று பின்னர் அறிவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வடக்கில் வழிபாட்டு தலங்களால் ஏற்படுத்தப்படும் இன முரண்பாடுகளுக்கு விரைவில் தீர்வு – அனுர

east tamil

இந்திய மீனவர் அத்துமீறலுக்கு எதிராக யாழில் போராட்டத்துக்கு அழைப்பு!

Pagetamil

இல்ல மெய்வல்லுனர் போட்டியின் போது இல்லங்களுக்கு அலங்கரிக்க தடை

east tamil

இலங்கையில் நாளொன்றுக்கு 4 பேர் வாய்ப்புற்றுநோயால் மரணம்

east tamil

இருபது இலட்சத்தை தொட்ட முச்சக்கரவண்டி விலை

east tamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!