மோசமான முகாமைத்துவத்தின் ஊடாக நாட்டை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளிய அரசாங்கத்தை பதவிவிலக வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்த ‘விடுதலைக்கான புரட்சி பாதயாத்திரை’ இன்று (26) ஆரம்பமாகியது.
காலை 10.30 மணியளவில் கண்டி மத்திய சந்தைக்கு முன்பாக பாதயாத்திரை ஆரம்பமானது.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஆரம்பமான பாதயாத்திரை பேராதனை வீதியூடாக பேராதனை கடுகன்னாவை வரை சென்று இன்று மாவனல்லையில் நிறைவடையும்.
நாளை (27) மாவனல்லையில் இருந்து கல்கமுவ வரையும், நாளை மறுதினம் (28) கல்கமுவ முதல் தனோவிட்ட வரையும், 29ஆம் திகதி தனோவிட்ட முதல் யக்கலை வரையும், 30ஆம் திகதி யக்கலையில் இருந்து பேலியகொடை வரையும், 1ஆம் திகதி கொழும்பு சுதந்திர சதுக்கத்திலும் போராட்டமும் இடம்பெறவுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1