கடவத்தையில் உள்ள முன்னணி ஆடை விற்பனை நிலையத்தின் கூரையில் மறைந்திருந்த சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ரூ.27 மில்லியன் திருடப்பட்ட பணம் அவரிடம் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
கடவத்தையில் உள்ள ஆடை விற்பனை நிலையத்தின் பண பெட்டகத்திற்குள் சேமித்து வைக்கப்பட்டிருந்த ரூ.27 மில்லியன் பணத்தை, சந்தேக நபர் திருடியுள்ளார்.
இயந்திரத்தின் உதவியுடன் பண பெட்டகத்தை உடைத்துள்ளார்.
எனினும், ஊழியர்கள் சிலர் கடைக்கு வந்து விட்டதால் அவரால் தப்பிச் செல்ல முடியவில்லை. வர்த்தக நிலையத்தின் மேல் மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் மறைந்திருந்தார்.
அவரை பொலிசார் கைது செய்ததுடன், அவரிடமிருந்த ரூ. 27,219,380 திருடப்பட்ட பணமும் மீட்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 32 வயதுடைய நாகொல்லாகம பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் இன்று மஹர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்