Pagetamil
இலங்கை

டீசலுக்கு காத்திருந்த லொறியில் சிக்கி முதியவர் பலி!

அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசலை பெறுவதற்கு நீண்ட வரிசையில் நின்றுகொண்டிருந்த, அச்சுவேலி பத்தமேனி பகுதியைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை கனகரத்தினம் (70) என்பவர் பாரவூர்தியில் நசியுண்டு உயிரிழந்துள்ளார்.

இன்று (10) காலை 10 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.

சிறு வீதியிலிருந்து பிரதான வீதிக்குள் நுழைய முதியவர் முற்பட்ட வேளையில், டீசலுக்காக காத்திருந்த பாரவூர்தி நகர்ந்ததால் சில்லுக்குள் நசியுண்டு உயிரிழந்துள்ளார்.

சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

பார ஊர்தி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்த அச்சுவேலி போக்குவது பொலிஸார் மேலதிக விசாரணைகளை ​மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இ-டிக்கெட் மோசடி- பொலிஸ் அதிகாரி சேவையிலிருந்து இடைநிறுத்தம்

east tamil

கிளிநொச்சி நீர் சுத்திகரிப்பு பணிகளை பார்வையிட்ட அமைச்சர்

Pagetamil

யாழில் அரசியல் பிரமுகர்களை சந்தித்த இந்திய தூதர்

Pagetamil

சுண்டிக்குளத்தில் கடற்படையினரால் மர்ம பொருள் மீட்பு

east tamil

கட்டைக்காட்டு பகுதியில் புதிதாக போடப்பட்ட 15 மின் விளக்குகள்

east tamil

Leave a Comment