26.8 C
Jaffna
December 23, 2024
Pagetamil
சினிமா

நடிகை சோனம் கபூர் வீட்டில் பெரும் கொள்ளை!

நடிகை சோனம் கபூர்- கணவர் ஆனந்த் அஹுஜா தம்பதியின் புது தில்லி இல்லத்தில் ரூ.1.41 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இந்த வீட்டில் 9 பராமரிப்பாளர்கள், ஓட்டுநர்கள், தோட்டக்காரர்கள் மற்றும் பிற தொழிலாளர்கள் உட்பட 25 பேர் பணியாற்றுகின்றனர். குற்றவாளிகள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

இந்த குற்றச்சம்பவம் நடந்து சில வாரங்களாகி விட்ட போதும், பொலிசார் தகவல் வெளியில் கசியாமல் விசாரணைகளை நடத்தி வந்துள்ளனர். எவ்வாறாயினும், ஊடகங்களில் அந்த தகவல் கசிந்துள்ளது.

சோனம் கபூரின் மாமனார், பாட்டி சரளா அஹுஜா, மகன் ஹரிஷ் அஹுஜா மற்றும் மருமகள் பிரியா அஹுஜா ஆகியோருடன் டெல்லி இல்லத்தில் வசித்து வருகிறார். பெப்ரவரி 23 அன்று, சரளா அஹுஜா மற்றும் அவரது மேலாளர் ரித்தேஷ் கவுரா ஆகியோர் துக்ளக் சாலை காவல் நிலையத்திற்குச் சென்று, அவரது அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த கேபினட்டில் இருந்து நகைகள் மற்றும் பணம் திருடப்பட்டது குறித்து புகார் அளித்தனர்.

பெப்ரவரி 11 ஆம் திகதி சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, ​​நகைகள் மற்றும் பணம் காணாமல் போனது தெரிய வந்ததாக தெரிவித்துள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நகைகளை சரிபார்த்து அலமாரியில் வைத்திருந்ததாக சரளா அஹுஜா தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு சிசிடிவி காட்சிகளை தற்போது போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த வழக்கை துக்ளக் சாலை காவல் நிலைய அதிகாரிகள் பலர் விசாரித்து வருகின்றனர். கடந்த மாதம் வெளியான ஒரு அறிக்கையின்படி, சோனத்தின் மாமனாரின் நிறுவனம் ரூ.27 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மொத்தம் பத்து பேர் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையில், சோனம் மற்றும் ஆனந்த் தங்களின் முதல் குழந்தையை எதிர்பார்க்கிறார்கள், இப்போது அவர் மும்பையில் தனது தந்தை அனில் கபூருடன் தங்கியுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஜெயம் ரவி-ஆர்த்தி விவாகரத்து செய்தி

east tamil

அனுஷ்காவின் புதிய பட ரிலீஸ் திகதி அறிவிப்பு

Pagetamil

பிரபாஸ் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுகிறாரா நயன்தாரா?

Pagetamil

‘சிவகார்த்திகேயன் 25’இல் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா

Pagetamil

“கடந்த ஆண்டே எனக்கு திருமணம் ஆகிவிட்டது” – நடிகை டாப்ஸி

Pagetamil

Leave a Comment