இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரசிற்குமிடைில் இன்று சந்திப்பு இடம்பெற்றது.
இ.தொ.கா சார்பில் இராஜாங்க அமைச்சர் கௌரவ ஜீவன் தொண்டமான் மற்றும் திரு.செந்தில் தொண்டமான் ஆகியோர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
மலையகத்தில் மேற்கொள்ளப்படும் இந்திய அபிவிருத்தி திட்டங்கள் குறித்து மீளாய்வு செய்யப்பட்டது.மேலும் இந்திய ஒத்துழைப்பை விஸ்தரிப்பது குறித்தும் கருத்துகள் பரிமாறப்பட்டன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1