Pagetamil
கிழக்கு

மூதூர் மலையடி பிள்ளையாருக்கு காணி வழங்கப்பட்டது!

மூதூர், மலையடிப் பிள்ளையார் கோயில் நிர்மாணத்தில் இருந்து வந்த சர்ச்சைக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. கோயில் அமைப்பதற்கான காணி, நேற்று (22) காலை வழங்கி வைக்கப்பட்டது.

மூதூர், 64 ஆம் கட்டை மலையடி பகுதியில் பல வருடங்களுக்கு மேலாக மலையடிப் பிள்ளையார் கோயில் இருந்து வந்தது.

இந்நிலையில், இக் கோயிலை புதிதாகக் கட்டுவதற்கு மூதூர் பிரதேச இந்துக் குருமார் சங்கத்தினர் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் முயற்சித்தனர். அப்போது காணிக்கான ஆவணங்கள் இல்லையென மூதூர் பிரதேச செயலாளர் கோவில் நிர்மாணப் பணிகளை தற்காலிகமாக தடுத்து நிறுத்தினார்.

இதன்பின்னர் பல முறுகல் நிலை ஏற்பட்டு, பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில், மூதூர் பிரதேச செயலக காணி உத்தியோகத்தர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மூதூர் பிரிவு அதிகாரிகள், கிராம உத்தியோகத்தர் உள்ளிட்டோர் நேற்று வருகைதந்து, மூதூர் பிரதேச இந்துக் குருமார் சங்கத்தினர் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடி, காணியை வழங்கி வைத்தனர்.

14 அடி நீளமும், 14 அடி அகலமும் கொண்டதாக மூதூர் மலையடிப் பிள்ளையார் கோயிலை அமைப்பதற்கு காணி கையளிக்கப்பட்டுள்ளதாக ,மூதூர் பிரதேச இந்துக் குருமார் சங்கத் தலைவர் சிவஸ்ரீ இ.பாஸ்கரன் குருக்கள் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தம்பலகாமத்தில் ஜனநாயக பங்குதாரர்களுடனான கலந்துரையாடல்

east tamil

திருகோணமலை மாவட்ட செயலக தைப்பொங்கல் விழா – 2025

east tamil

யானையின் தாக்குதலால் வைத்தியசாலையில் ஒருவர் அனுமதி

east tamil

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் மற்றுமொரு விபத்து

east tamil

அலஸ்தோட்ட கடற்கரையில் இறந்த திமிங்கலம்: புதைக்கும் பணிகள் முன்னெடுப்பு

east tamil

Leave a Comment