யாழிலிருந்து சென்ற பேருந்து முல்லைத்தீவில் கவிழ்ந்தது: ஒருவர் பலி!

Date:

யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த தனியார் பேருந்து, முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் விபத்திற்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அரச பேருந்தை, தனியார் பேருந்து முந்தி செல்ல முற்பட்ட போது வேக கட்டுப்பாட்டினை இழந்து விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தது.

விபத்து நடந்த போது தனியார் பேருந்தில் 23 பேர் பயணித்துள்ளனர்.

இதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

22 பேர் வரையில் சிறு காயமடைந்துள்ளார்கள்.

முல்லைத்தீவு பொலீசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.

-பிருந்தாபன்-

spot_imgspot_img

More like this
Related

நிதி நிறுவனத்தில் அதிர்ச்சிச்சம்பவம்: பெண்கள் கழிப்பறையில் இரகசிய கமரா!

ஒரு நிதி நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களின் நிர்வாணப் புகைப்படங்களை எடுத்த நபர்,...

லெபனானில் இஸ்ரேல் படைகள் தங்கியிருப்பதை ஏற்றுக்கொள்ளாத அமெரிக்கா!

லெபனானுக்குள் இஸ்ரேலிய இராணுவம் நிரந்தரமாகத் தங்கியிருப்பதை டிரம்ப் நிர்வாகம் ஆதரிக்கவில்லை என்று...

இன்று சில பகுதிகளில் கடும் வெப்பம்

வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்