25.1 C
Jaffna
December 15, 2024
Pagetamil
இலங்கை

நேற்று பால்மா; நாளை மின்சாரம், எரிவாயு?

மின்சார கட்டணத்தை உயர்த்துவதற்கான அமைச்சரவை பத்திரம் நாளை (21) மின்சக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

ஏற்கனவே, நேற்றிரவு பால்மாவின் விலை உயர்ந்துள்ளது. நாளை மின்கட்டண உயர்வு பற்றிய அறிவித்தல் வெளியாகலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, 12.5 கிலோகிராம் எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலையை 2000 ரூபாவால் உயர்த்துமாறு லிட்ரோ நிறுவனம் கோரியுள்ளது. விரைவில் எரிவாயுவும் விலை அதிகரிக்குமென எதிர்பார்க்கலாம்.

400 கிராம் பால்மாவின் விலை நேற்று இரவு முதல் 250 ரூபாவினால் அதிகரித்துள்ளது. ஏற்கனவே ரூ 540 இற்கு விற்கப்பட்ட 400 கிராம் பால்மா இனி ரூ.790 இற்கு விற்கப்படும்.

அத்துடன், 1 கிலோகிராம் பால்மாவின்  விலையை 600 ரூபாவினால் உயர்த்துவதற்கு  பால்மா இறக்குமதியாளர் சங்கம் முன்மொழிந்துள்ளதுட. தற்போது ரூ.1,345 இற்கு விற்கப்படும் 1 கிலோகிராம் பால்மா ரூ.1,945 அக உயரலாம்.

இதேவேளை, மின் கட்டணத்தில் திருத்தம் செய்வதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை மின்சக்தி அமைச்சு திங்கள்கிழமை சமர்ப்பிக்க உள்ளது. 90 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துவோருக்கு சலுகை அளிக்கப்படும் என்றும், 90 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துவோருக்கு புதிய முறையில் கட்டணம் விதிக்கப்படும் என்றும் அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையில், லிட்ரோ கேகாஸ் லங்கா லிமிடெட் அதிகாரிகள், நஷ்டத்தை சமாளிக்க, அடுத்த மூன்று மாதங்களுக்கு 12.5 கிலோ வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலையை குறைந்தபட்சம் ரூ.2,000 ரூபாய் உயர்வுத்தும் படி கோரியுள்ளனர். 12.5 கிலோ எடையுள்ள லிட்ரோ வீட்டு எரிவாயு சிலிண்டரின் தற்போதைய விலை ரூ. 2,675 ஆகும். புதிய விலை உயர்வு நடந்தால் விலை ரூ. 4,675 ஆகும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தேசிய மக்கள் சக்தியின் மற்றொரு எம்.பியின் கல்வித் தகைமையில் சர்ச்சை!

Pagetamil

கல்முனை வின்சன் டி பவுல் சபையின் வருடாந்த ஒளி விழா

east tamil

செந்திலின் ஊழலும் அருணின் மௌனமும்

east tamil

பெண்களுக்கு அரச அச்சுறுத்தல் – பெண்ணுரிமை செயற்பாட்டாளர்கள்

east tamil

மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் நியமனம்

east tamil

Leave a Comment