பொதுமக்களுக்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் சேவைகளில் காணப்படும் குறைகளை நிவர்த்தி செய்யும் முகமாக மாகாண மற்றும் மத்திய மோட்டார் போக்குவரத்து திணைக்களங்கள் என்பன இணைந்து எதிர்வரும் ஏப்ரல் மாதம் 08ம் மற்றும் 09ம் திகதிகளில் வடக்கு மாகாண சபை வளாகம், கைதடியில் மாபெரும் நடமாடும் சேவை ஒன்றினை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளது.
குறித்த நடமாடும் சேவையூடாக பொதுமக்களுக்கு பின்வரும் சேவைகள் மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
01. 2014/2015ம் ஆண்டின் பட்ஜட்டில் ஆலோசிக்கப்பட்டதன் படியாக அலுவலர்களுக்கு வழங்கப்பட்ட மோட்டார் சைக்கிளுக்கான நிபந்தனைகளை நீக்குதல்.
02. மத்திய மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு இதுவரை ஆவனங்கள்
சமர்ப்பிக்கப்பட்டு நிலுவையாக உள்ள விடயங்கள்.
03. புத்தகத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளல்.
04. அனைத்து வாகனங்களுக்குமான அடையாள மற்றும் எடை சான்றிதழ் வழங்குதல்.
05. உடமை மாற்ற விண்ணப்ப படிவம் ஏற்றுக்கொள்ளல்.
06. ஓட்டுநர் பரீட்சார்த்த தேர்வு.
07. தனிப்பட்ட மோட்டார் கோச் இனை ஒமினி பஸ் ஆக மாற்றம் செய்தல்.
08. வாசித்தல், எழுதுதலில் விசேட தேவை உடையோரிற்கான சாரதி அனுமதிப்பரீட்சை.
09. வாகன உடமைமாற்ற விடயத்துடன் தொடர்புடைய பிரதேச செயலக அலுவலர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி.
10. வீதி பாதுகாப்பு மற்றும் பாரம்பரிய வாகனங்களின் அணிவகுப்பு.
எனவே இவ் அரிய சந்தர்ப்பத்தினை தவறவிடாது குறித்த நடமாடும் சேவையில் வடமாகாணத்தை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் பங்குபற்றிபயன்பெறுமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
-சண்முகம் தவசீலன்-