25.1 C
Jaffna
January 8, 2025
Pagetamil
உலகம்

ரஷ்ய அரச தொலைக்காட்சியில் போர் எதிர்ப்பு பதாதை காண்பித்த பெண் ஊடகவியலாளர் அபராதத்துடன் விடுதலை!

ரஷ்ய தொலைக்காட்சியின் நேரலையில் ரஷ்யாவிற்கு எதிராக திடீரென குரல் கொடுத்த ரஷ்ய ஊடகவியலாளர் அபராதம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.

ரஷ்ய ஜனநாயகம் குறித்து அண்மை நாட்களாக கேள்வியெழுப்பி வரும் மேற்கு நாடுகளின் முகத்தில் கரிபூசுவதை போல இந்த நடவடிக்கை அமைந்தது.

சனல் வன் என்ற ரஷ்ய அரச தொலைக்காட்சியின் திங்கள்கிழமை இரவு செய்தியறிக்கையின் போது, செய்தி வாசிப்பாளரின் பின்னால் திடீரென நுழைந்த மெரினா ஓவ்ஸ்யானிகோவா, போர் எதிர்ப்புப் பதாதையை ஏந்தி, உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினார்.

‘இவர்கள் பொய் சொல்கிறார்கள். இவர்கள் சொல்வதை நம்பாதீர்கள்’ என்றும் கூறினார்.

பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

இதை தொடர்ந்து மேற்கு நாட்டு ஊடகங்கள், அதை தலைப்பு செய்தியாக்கியதோடு, அந்த பெண் ஊடகவியலாளர் கொல்லப்படுவார் என்றும் அச்சம் தெரிவித்தன. பிரான்ஸ் ஜனாதிபதி, அந்த ஊடகவியலாளரின் பாதுகாப்பு பற்றி ரஷ்ய ஜனாதிபதியுடன் பேசவுள்ளதாக தெரிவித்தர்.

இந்த நிலையில், நேற்று செவ்வாயன்று மொஸ்கோவின் ஓஸ்டான்கின்ஸ்கி மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதி, ஓவ்சியானிகோவாவிற்கு 30,000 ரூபிள் அபராதம் விதிக்க உத்தரவிட்டார்.

இதேவேளை, கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் இந்த எதிர்ப்பை “போக்கிரித்தனம்” என்று விவரித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கிறிஸ்மஸ் கேக்கில் நஞ்சு கலந்து 3 குடும்ப உறுப்பினர்களை கொன்ற மருமகள் கைது!

Pagetamil

நேபாளத்தில் நிலநடுக்கம்

east tamil

பதவி விலகுவதாக அறிவித்தார் கனடா பிரதமர்: அமெரிக்காவின் புதிய மாநிலமாக இணைய ட்ரம்ப் அழைப்பு!

Pagetamil

உலகின் மிக வயதான பெண் காலமானார்!

Pagetamil

இறந்த குட்டியின் உடலை சுமந்தபடி சுற்றித்திரியும் திமிங்கிலம்!

Pagetamil

Leave a Comment