24.4 C
Jaffna
January 5, 2025
Pagetamil
உலகம்

‘பொய் சொல்கிறார்கள்’: ரஷ்ய அரச தொலைக்காட்சி நேரலையில் போர் எதிர்ப்பு பதாதையுடன் நுழைந்த பத்திரிகையாளர்!

உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் நேற்று 19வது நாளை எட்டிய நிலையில், ரஷ்ய பெண் பத்திரிகையாளர் ஒருவரின் நடவடிக்கைக சர்வதேச கவனம் பெற்றுள்ளது.

நேற்று மாலை ரஷ்யாவின் பெர்வி கனல் (சனல் வன். சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு ரஷ்ய கூட்டமைப்பில் ஒளிபரப்பப்பட்ட முதல் நிலையம் சனல் வன் ஆகும், மேலும் உலகம் முழுவதும் 250 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைக் கொண்டுள்ளது.) எனும் அரசு தொலைக்காட்சியில் வழக்கம்போல் நேரலையாக செய்தி வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது பின்னால் ஒரு பதாகையுடன் இளம் பெண் பத்திரிகையாளர் வந்து நின்றார்.

அந்தப் பதாகையில் கையால் ரஷ்ய, உக்ரைன் தேசியக் கொடிகள் வரையப்பட்டிருந்தன. கூடவே ரஷ்ய மொழியில், போர் வேண்டாம். போரை நிறுத்தங்கள். போலிப் பிரச்சாரங்களை நம்பாதீர்கள். இங்கிருந்து உங்களிடம் பொய் சொல்கிறார்கள். ரஷ்யர்களுக்கு போரின் மீது விருப்பமில்லை என்று எழுதப்பட்டிருந்தது.

ஆங்கிலத்தில் NO WAR என்றும் எழுதப்பட்டிருந்தது.

மேலும் அந்தப் பெண் போர் வேண்டாம் என்று கோஷமிட்டார். இதனால் நேரலையில் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு சில விநாடிகளில் பின்னால் இருந்த ஃப்ரேம் மாற்றப்பட்டது.

அந்தப் பெண் பெர்வி கனல் செய்தி ஊடகத்தின் எடிட்டர் மெரினா ஓவ்ஸியானிகோவா என்ற அடையாளம் தெரிந்தது. இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய சில நிமிடங்களிலேயே மரியா ஏற்கெனவே பதிவு செய்து வைத்திருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.

அதில் அவர், “உக்ரைனில் நடப்பது ஒரு குற்றம். ரஷ்யா அடக்குமுறை நாடு. இந்த அடக்குமுறை, அத்துமீறலுக்கு ஒரே ஒரு நபர் தான் காரணம். அவர் பெயர் விளாடிமிர் புடின். எனது தந்தை ஒரு உக்ரேனியர், என் தாய் ஒரு ரஷ்யப் பெண். நான் இத்தனை நாட்களாக ரஷ்ய அரசு ஊடகத்தில் வேலை செய்ததற்கு மிகவும் வருந்துகிறேன். கடந்த சில ஆண்டுகளாக பார்வி கானாலில் பணியாற்றி க்ரெம்ளின் மாளிகை (ரஷ்ய ஜனாதிபதி அதிகாரபூர்வ மாளிகை) கூறிய பொய்ப் பிரச்சாரங்களை எல்லாம் பரப்பினேன் என நினைக்கும்போது வெட்கப்படுகிறேன். ரஷ்ய மக்கள் ஜாம்பி மனநிலைக்கு வர நான் காரணமாக இருந்ததற்காக வெட்கப்படுகிறேன்.

இப்போது ஒட்டுமொத்த உலகம் ரஷ்யாவை ஒதுக்கிவைத்து தனது முதுகைக்காட்டியுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளாவது ரஷ்ய தலைமுறையினர் இந்த சகோதர யுத்தத்தின் கொடூர கரையைத் துடைக்க முடியாமல் வாடுவார்கள். ரஷ்யர்களாகிய நாங்கள் புத்திசாதுர்யத்துடன் யோசிக்கிறோம். இந்த முட்டாள்தனத்தைக் கொண்டு வரும் சக்தி நம்மிடம் தான் உள்ளது. போருக்கு எதிரான போராட்டத்தில் இணையுங்கள். அஞ்ச வேண்டாம். அவர்களால் நம் அனைவரையும் கைது செய்ய இயலாது” என்று கூறியுள்ளார்.

ஜெலன்ஸ்கி பாராட்டு

மெரினா ஓவ்ஸியானிகோவாவின் நடவடிக்கையை உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி பாராட்டியுள்ளார்.

அவர் இன்று ரெலிகிராமில் பதிவேற்றிய வீடியோவில்,

“உண்மையை வெளிப்படுத்த முயற்சிப்பதை நிறுத்தாத ரஷ்யர்களுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். தவறான தகவல்களை எதிர்த்துப் போராடி உண்மையைச் சொல்பவர்களுக்கு, தங்கள் நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்களிடம் உண்மையான உண்மைகளைச் சொல்லுங்கள். முழு உலகத்திலிருந்தும் மூடப்பட்டு, மிகப்பெரிய வடகொரியாவாக உங்கள் நாடு மாறாத வரை தொடர்ந்து போராடுங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

கைது

மெரினா ஓவ்ஸியானிகோவா தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஓஸ்டான்கினோ பொலிசாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அவருக்கு இப்போது 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். அவரது வழக்கறிஞர், டிமிட்ரி ஜாக்வாடோவ், மெரினா தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அறிக்கைகள் இருந்தாலும், தனது வாடிக்கையாளரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உலகின் மிக வயதான பெண் காலமானார்!

Pagetamil

இறந்த குட்டியின் உடலை சுமந்தபடி சுற்றித்திரியும் திமிங்கிலம்!

Pagetamil

16 முறை விண்வெளியில் புத்தாண்டை கொண்டாடும் சுனிதா வில்லியம்ஸ்

east tamil

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி காட்டர் காலமானார்!

Pagetamil

தென்கொரிய விமான விபத்தில் 179 பேர் பலி

Pagetamil

Leave a Comment