Pagetamil
இந்தியா

ஹிஜாப் தடை செல்லும்: கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

கர்நாடக கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிந்து வரை தடை விதிக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் உடுப்பி மாவட்டம் குந்தாபுராவில் உள்ள அரசு பியூ கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் , கர்நாடகாவின் பிற பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்களிலும் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது.

இதையடுத்து கர்நாடகாவில் பல இடங்களில் போராட்டம் வெடித்த நிலையில் . கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்து அம்மாநில அரசு அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மாணவிகள் சிலர் மனு தாக்கல் செய்தனர்.

ஹிஜாப் விவகாரத்தில் இன்று தீர்ப்பு வெளியாக இருந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் பள்ளி ,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது. 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய அரசு விதித்த தடை செல்லும் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீட்சித், நீதிபதி ஜே,எம், காஜி அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில் ஹிஜாப் இஸ்லாமிய மதத்தின் அடிப்படை அவசியம் கிடையாது என்றும் 3 நீதிபதிகள் அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.

கல்வி நிலையங்களில் சீருடை பரிந்துரைக்கப்படுவது அடிப்படை உரிமைகள் மீதான நியாயமான கட்டுப்பாடு ஆகும். அதை மாணவர்கள் எதிர்க்க முடியாது. அதேசமயம் ஹிஜாப் தடைக்கு எதிரான சரியான முகாந்திரங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை என்று கூறி ஹிஜாப் தடைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்தது கர்நாடக உயர் நீதிமன்றம்.

ஹிஜாப் அணிவது என்பது இஸ்லாமிய மத சட்டத்தில் அத்தியாவசிய விஷயமல்ல எனவும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

12 இளைஞர்களை காதலித்து ஏமாற்றிய பெண்: 19 வயது இளைஞருடன் ஓட்டம்

Pagetamil

இன்ஸ்டா காதலால் விபரீதம்: நீரில் மூழ்கி 3 பேர் பலி!

Pagetamil

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் ஏன்? – மத்திய அரசு முன்வைக்கும் காரணங்கள்

Pagetamil

கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கர் கைது

Pagetamil

உலகப் புகழ்பெற்ற தபேலா மேதை ஜாகிர் உசேன் மறைவு

Pagetamil

Leave a Comment