தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், ஜனாதிபதிக்குமிடையில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை 3.30 மணியளவில் இந்த சந்திப்பு நடக்க திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், இந்த சந்திப்பில் கலந்து கொள்ளப் போவதில்லையென தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) அறிவித்திருந்தது. இதையடுத்து, குழப்பம் ஏற்பட்டிருந்தது.
தமது நிலைப்பாட்டை எழுத்து மூலம், ஜனாதிபதிக்கும் ரெலோ அறிவித்திருந்தது. பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதெனில், தமிழ் மக்கள் எதிர்நோக்கும் சில பிரச்சனைகளிற்கு தீர்வை அறிவித்து, பேச்சுக்குரிய சூழலை ஏற்படுத்த வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ரெலோவின் நிலைப்பாடு மற்றும் எதிரணி இன்று திட்டமிட்டுள்ள போராட்டம் காரணமாக சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.