வடக்கின் பொன் அணிகளின் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரி மற்றும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்ட போட்டி நாளை (11) வெள்ளிக்கிழமை சென் பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகிறது.
11,12ஆம் திகதிகள் இந்த போட்டி நடைபெறும்.
இந்தப் போட்டிக்கான ஊடக சந்திப்பு இன்று வியாழக்கிழமை சென் பற்றிக்ஸ் கல்லூரியில் இடம் பெற்றது.
இதுவரை காலமும் நடைபெற்ற போட்டிகளில் இரு நாள் போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி 32 தடவையும் யாழ்ப்பாண கல்லூரி 16 தடவைகளும் வெற்றி பெற்றுள்ள நிலையில் 32 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தன.
ஒருநாள் மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர் போட்டிகளில் சென் பற்றிக்ஸ் கல்லூரி 21 தடவைகளும் 6 தடவைகள் யாழ்ப்பாணக் கல்லூரியில் வெற்றி பெற்றுள்ளன.
பொன் அணிகளின் போரில் சென் பற்றிக்ஸ் கல்லூரி அணிக்கு ஆ.எப் டெஸ்வினும் யாழ்ப்பாணக் கல்லூரிக்கு என்.விஷ்ணுகாந்தும் தலைமை தாங்குகின்றனர்.