விமல் வீரவன்ச மனைவி வழக்கில் இன்று தீர்ப்பு!

Date:

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவுக்கு எதிரான வழக்கு தொடர்பான தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு பொய்யான தகவல்களை சமர்ப்பித்து இராஜதந்திர கடவுச்சீட்டை போலியாக தயாரித்தமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வழக்குகளின் பரிசீலனை அண்மையில் நிறைவடைந்தது.

அதன்படி, குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என கொழும்பு பிரதான நீதவான் புத்திக ரகல பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி அறிவித்தார்.

சஷி வீரவன்ச 1967 ஆம் ஆண்டு பிறந்ததாகவும், கடவுச்சீட்டில் அவரது பிறந்த வருடம் 1971 எனக் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், சசி வீரவன்சவிடம் இரண்டு பிறந்த நாளைக் கொண்ட இரண்டு தேசிய அடையாள அட்டைகள் இருப்பதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் நாளை பதவியேற்பு!

ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை எண்ணிக்கையுடன் ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை, தவெக...

யாழ் போதனா வைத்தியசாலை தீ விபத்து; பெருமளவு மருந்துகள் அழிவு… மின் ஒழுக்கு காரணம்?: யாழில் தீயணைப்பு வசதி இல்லாததை வெளிச்சமிட்ட சம்பவம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருந்துக் களஞ்சியத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஏற்பட்ட...

தவெகவுக்கு விசிக ஆதரவு அளிக்க 2 காரணங்கள்… – திருமாவளவன் விவரிப்பு

தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலைப் பயன்படுத்தி குடியரசுத் தலைவர் ஆட்சி வரக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்