மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை மூதூர் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலத்த காயங்களுடன் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (09) பிற்பகல் 4 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மூதூர் பிரதேசத்தில் இருந்து மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனத்தின் முன் பக்க சில்லு பகுதி உடைந்ததால் கட்டுபாட்டை இழந்த டிப்பர் வாகனம் குடைசாய்ந்ததில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்
விபத்தில் டிப்பர் வாகன சாரதியே பலத்த காயங்களுடன் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
–ரவ்பீக் பாயிஸ்-
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1