யாழ்ப்பாணத்தில் கேரள கஞ்சாவுடன் உடன்பிறந்தவர்களான இளைஞனும், யுவதியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு பொலிசாரால் இன்று (6) காலையில் பொம்மைவெளி பகுதியில் உள்ள வீட்டில் வைத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.
கைதான 25, 27 வயதான இருவரிடமிருந்து 200 கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டது. வீட்டில் வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட சமயத்திலேயே இவர்கள் கைதாகினர்.
தற்போது சிறையில் இருக்கும் யாழ்ப்பாணத்தின் பிரபல போதைப்பொருள் வியாபாரியான வசந்தன் என்பவரின் பிள்ளைகளே கைது செய்யப்பட்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1