அரசியல் லாபத்திற்காக வெளியில் பேசுவதால் ஏற்படும் பிரச்சனை அரசியல் ரீதியில் எமக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்
வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
எரிபொருள் விலையேற்றம் என்பது எல்வலா நாடுகளிலும் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய்யின் விலையேற்றம் காரணமாக ஏற்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் அதனை தவிர்த்துக் கொள்ள முடியாது. எரிபொருள் தட்டுப்பாடு விரைவாக தீர்க்கப்படும். கப்பல்கள் வந்திருக்கிறது. எரிபொருள் இறக்கப்படுகிறது. வழமை போன்று எரிபொருள் விநியோகம் விரைவில் நடக்கும்.
மேலும், ஜனாதிபதி தேர்தலிலும், பாராளுமன்ற தேர்தலிலும் ஒரு குடும்பமாக இருந்து எடுத்த முயற்சிகள் தான் எமக்கு பாரிய வெற்றிகளை தந்தன. குடும்பத்திற்குள் ஏற்படும் பிரச்சனைகளை அங்கேயே பேசி தீர்க்க வேண்டுமே தவிர, அதை வெளியில் சொல்லும் போது பாரிய பிரச்சனைகள் ஏற்படுகிறது. குழு கூட்டம், கட்சி தலைவர் கூட்டம் என இருந்தும் அதில் பேசாமல் அரசியல் லாபத்திற்காக வெளியில் பேசுவதால் ஏற்படும் பிரச்சனையால் ஏற்படும் பாதிப்புக்கள் அரசியல் ரீதியில் எமக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது எனத் தெரிவித்தார்.



