13 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண்ணொருவர் எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரின் மூன்று பிள்ளைகளையும் அவர்களது பெற்றோர் மற்றும் அவர்களது தந்தையிடம் ஒப்படைக்குமாறு காலி மேலதிக நீதவான் உத்தரவிட்டார்.
29 வயதான மூன்று பிள்ளைகளின் தாயே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் உனவட்டுன பிரதேசத்தை சேர்ந்தவர். குடும்ப தகராறு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஹிக்கடுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு வந்துள்ளார்.
வீட்டில் இருந்த 13 வயது சிறுவன், அந்தப் பெண்ணால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகினார்.
பின்னர் சிறுவனுடன் அக்குரஸ்ஸ, தெனியாய, குருநாகல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று தங்கியுள்ளார்.
இதேவேளை, அவர்கள் காணாமல் போனமை தொடர்பில் சிறுவனின் தாய் ஹிக்கடுவ பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். அதன்படி, குருநாகல் நோக்கிச் சென்றுகொண்டிருந்த பெண்ணையும் சிறுவனையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.