நாடளாவிய ரீதியில் இன்றும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
P, Q, R, S, T, U, V மற்றும் W ஆகிய பகுதிகளில் 5 மணிநேரமும் 15 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, காலை 8.30 மணி முதல் மாலை 4.45 மணி வரை 2 மணிநேரம் 45 நிமிடங்களும், மாலை 4.45 மணி முதல் இரவு 9.45 மணி வரை 2 மணி நேரம் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.
ஏ, பி மற்றும் சி ஆகிய பகுதிகளில் 4 மணி நேரம் 40 நிமிடம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும். காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை 2 மணி நேரம் 40 நிமிடம் மின்வெட்டும், மாலை 4.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை இரண்டு மணி நேரமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தி நிலையங்கள் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், திட்டமிட்ட மின்வெட்டுக்கு அனுமதி வழங்குமாறு இலங்கை மின்சார சபை கோரியுள்ளது.