குறித்த நேரத்திற்கு மேல் மின்வெட்டு ஏற்பட்டால், அது குறித்து உடனடியாக அறிவிக்குமாறு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.
மின்சாரம் துண்டிக்கப்பட்ட பிரதேசம் மற்றும் நேரம் ஆகியவற்றை துல்லியமாக குறிப்பிட்டு முறைப்பாடுகளை உடனடியாக சமர்ப்பிக்குமாறு தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்தார்.
இதேவேளை, இன்று இரவு மின்வெட்டு இருக்காது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
A, B மற்றும் C பிரிவுகளுக்குள் வசிப்பவர்கள் பகலில் இரண்டரை மணிநேரம் மின்வெட்டை அனுபவிப்பார்கள், மற்ற வலயங்களில் இன்று பகல் நேரத்தில் மின்வெட்டு இருக்காது.




