27 C
Jaffna
December 23, 2024
Pagetamil
உலகம்

உக்ரைன் போர் எதிரொலி: கச்சா எண்ணெய், தங்கத்தின் விலை எகிறியது; பங்குச்சந்தைகளில் வீழ்ச்சி!

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியுள்ள நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை பரல் ஒன்றுக்கு 100 அமெரிக்க டொலர் என்றளவில் உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலையும்  அதிகரித்துள்ளது.

சர்வதேச சந்தையின் ஒரு பரல் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை கடந்த ஜனவரி 31ஆம் திகதி 91.03 டொலருக்கு வர்த்தகமானது. தற்போது பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பரல் 98 டொலரில் வர்த்தகமாகி வந்தது.

இந்நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியுள்ள நிலையில் கச்சா எண்ணெய்யின் விலை பரல் ஒன்றுக்கு 100 அமெரிக்க டொலர் என்றளவில் உயர்ந்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மீண்டும் கச்சா எண்ணெய்யின் விலை 100 அமெரிக்க டொலரைத் தொட்டுள்ளது.

இதனால், உலகளவில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலை உயரும் என்றே கூறப்படுகிறது.

அதேவேளையில், கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கச்சா எண்ணெய் சந்தையில் சுணக்கம் நிலவியது. எண்ணெய் உற்பத்தி நாடுகள் கச்சா எண்ணெய் விலையேற்றத்திற்காகக் காத்திருந்தன.

தற்போது உக்ரைன் மீது தாக்குதல் தொடங்கியுள்ள நிலையில் இதனை வாய்ப்பாக சரியாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளது சர்வதேச கச்சா எண்ணெய் சந்தை.

இது ஒரு பரலுக்கு 115 டொலர் வரை கூட உயர வாய்ப்பிருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் வெகுவாகக் குறைந்த போதும் கூட இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. அங்கே உயர்ந்தபோதும் இங்கு உயர்த்தப்படவில்லை. இந்நிலையில் இந்தமுறை இந்த விலையேற்றம் இந்திய எரிபொருள் சந்தையில் என்ன மாதிரி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் என்று நிபுணர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இதேவேளை, பங்குச்சந்தையிலும் பெரும் சரிவு ஏற்பட்டது.

தங்கத்தின் விலை 1.2 வீதத்தால் அதிகரித்தது.

மின்னிலக்க நாணயச் சந்தையும் பெரும் வீழ்ச்சி கண்டுள்ளது. Bitcoin விலை 36,000 அமெரிக்க டொலருக்குக் கீழ், ஒரு மாதம் காணாத அளவு சரிந்திருக்கிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஜனாதிபதியாக இருந்தால்தான் கணவன்: சிரியாவிலிருந்து தப்பியோடிய ஆசாத்திடமிருந்து விவாகரத்து கோரும் மனைவி!

Pagetamil

உகண்டாவை உலுக்கும் டிங்கா டிங்கா வைரஸ்: இந்த வைரஸ் தொற்றினால் தொடர்ந்து நடனமாடிக் கொண்டேயிருப்பீர்கள்!

Pagetamil

நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கம்!

east tamil

பிரான்ஸை உலுக்கிய பாலியல் வல்லுறவு வழக்கு: சொந்த மனைவியை கொடூரமான பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய கணவன், 50 ஆண்களுக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

துரோகம் செய்த காதலி கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்கத் தேவையில்லை: காதலனுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு!

Pagetamil

Leave a Comment