28.6 C
Jaffna
December 22, 2024
Pagetamil
இலங்கை

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் நட்டம் மேலும் அதிகரிக்கும்!

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி காரணமாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு நாளாந்தம் ஏற்படும் நட்டம் மேலும் அதிகரிக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

கிராம அபிவிருத்தி என்ற போர்வையில் அரசாங்கம் தேர்தலுக்கு தயாராகி வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவின் அறிக்கைக்கு பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, அமைச்சரின் கூற்றுப்படி, பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு நாளாந்தம் 550 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாகவும், டொலருக்கு நிகரான ரூபாவின் விற்பனை வீதம் உண்மையில் ரூ.250 ஆக இருக்கும் போது, ரூபாவின் விற்பனை வீதம் ரூ..205  ஆக கட்டாயப்படுத்தப்படுவதால் நஷ்டம் அதிகரிக்கும் எனவும் தெரிவித்தார்.

வரியைக் குறைப்பது தீர்வாகாது,பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தினசரி இழப்பு ரூ.650 மில்லியனாக அதிகரிக்கும் என்றார்.

இந்த நடவடிக்கையின் மூலம் பெற்றோலிய கூட்டுத்தாபன பிரச்சினைகள் தீர்க்கப்படும், அதே நேரத்தில் அரசாங்கத்தின் பிரச்சினைகள் மோசமடையும் என்று கூறினார்.

தொழிலதிபர்களுக்கு வரி விதிப்பது, ஊழியர் வருங்கால வைப்பு நிதியில் பணம் பெற முயற்சிப்பது மற்றும் வரவிருக்கும் தேர்தல்களை மையமாகக் கொண்ட பிற மோசடி முயற்சிகள் மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்கான ‘100,000 திட்டங்களுக்கு’ நிதியைப் பயன்படுத்தி மக்களின் ஆதரவைப் பெற முயற்சிக்கும் விவகாரங்களில் அவர் அரசாங்கம் குற்றம் சாட்டினார்.

தேர்தலை நடத்துவதற்கு முன்னர் அரசாங்கம் தம் மீதான மக்களின் அவமதிப்பை மறைக்க முயற்சிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் டி சில்வா தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

2025 ஆம் ஆண்டின் பொது விடுமுறை நாட்களின் விபரம்!

Pagetamil

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த சீன கடற்படையின் மருத்துவ கப்பல்

east tamil

தலைவன் பிறந்த ஊர் என்பதால் நிராகரிப்பா?: வல்வெட்டித்துறை மக்கள் போராட்டம்!

Pagetamil

மாவீரர்நாளில் அரசியல் செய்யும் சிறிதரன் குழுவின் நடவடிக்கைக்கு முன்னாள் போராளிகள் எதிர்ப்பு

Pagetamil

சட்ட விரோத அகழ்வு பணிகளில் ஈடுபட்ட மூவர் கைது

east tamil

Leave a Comment