தொலைபேசி அறிமுகத்துடன் ‘ரூம் போட்ட’ வர்த்தகர்: அனைத்தையும் உருவிக்கொண்டு தலைமறைவான அழகி!

Date:

கடுவெல பிரதேசத்தைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரை இங்கிரியவில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு அழைத்து வந்து 39 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்து வர்த்தகரின் சொகுசு காருடன் தப்பிச் சென்ற அழகிய யுவதியை பொலிசார் தேடி வருகின்றனர்.

இங்கிரிய, அரக்கவில பிரதேசத்தில் வர்த்தகரின் கார் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காரில் இருந்த 1.9 மில்லியன் ரூபா பணமும் திருடப்பட்டது.

திருடப்பட்ட பொருட்களில் 25 பவுண் தங்க நெக்லஸ்கள், 6 பவுண் எடையுள்ள இரத்தினக்கல் மோதிரம் மற்றும்ஈரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட 8 பவுண் பதக்கமும் உள்ளடங்குவதாக போலீசார் தெரிவித்தனர்.

இங்கிரிய, பாதுக்க வீதியிலுள்ள ஹோட்டல் ஒன்றிற்கு வர்த்தகரும், யுவதியும் வந்துள்ளனர். பின்னர், யுவதி மட்டும் ஹொட்டலில் இருந்து வெளியேறிச் சென்று விட்டார்.

ஹொட்டல் அறையில் எந்த சத்தமுமில்லாததால், அதனை நிர்வாகத்திறனர் திறந்து பார்த்த போது, படுக்கையில் மயக்கமடைந்த நிலையில் வர்த்தகர் காணப்பட்டார்.

இதையடுத்து, ஹொட்டல் முகாமையாளரால் இங்கிரிய பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டது.

வர்த்தகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் சுயநினைவு பெற்ற பின்னர் பொலிசாரிடம் நடந்ததை தெரிவித்துள்ளார்.

தனது நண்பர் ஒருவர் கொடுத்த தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு யுவதியுடன் பேசியுள்ளார். உல்லாசமாக இருக்க வேண்டுமென வர்த்தகர் விரும்பியதையடுத்து, மறுநாள் இருவரும் ஹொட்டலிற்கு வந்துள்ளனர்.

தன்னிடமிருந்த 39 பவுண் நகைகள், சொகுசு கார் என்பன திருடப்பட்டு விட்டதாக வர்த்தகர் தெரிவித்தார்.

ஹொட்டல் அறையில் உள்ள சிசிரிவி கமரா காட்சியில், இருவரும் அறையில் அமர்ந்து ஏதோ பேசிக் கொண்டிருப்பதும் ஏதோ குடிப்பதும் பதிவாகியிருந்தது.. சிறிது நேரத்தில் அந்த யுவத அறையை விட்டு வெளியே சென்றுள்ளார்.

யுவதியை பொலிசார் தேடி வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பேச்சுக்காக பாகிஸ்தான் புறப்பட்ட அமெரிக்க துணை ஜனாதிபதி

துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் மற்றும் அமெரிக்க தூதுக்குழுவினர், ஈரான் குறித்த...

ஈரான் யுரேனியத்தின் கதி என்னவாகும்?

சுமார் 10 அணு குண்டுகளைத் தயாரிக்கப் போதுமான அளவு அதிக செறிவூட்டப்பட்ட...

விஜய் வேட்புமனுவில் சொத்து மதிப்பை குறைத்துக் காட்டியது முறைகேடானது: உயர் நீதிமன்றம்

இரு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்த தவெக தலைவர் விஜய்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்