வட கொரிய முன்னாள் ஜனாதிபதியின் பிறந்தநாளன்று, அவரது பெயரிலான பூக்கள் மலர ஏற்பாடு செய்யாத தோட்ட தொழிலாளர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வட கொரியாவின் ஜனாதிபதி கிம் ஜாங்- உன், விசித்திர காரணங்களிற்காக தண்டனை விதிப்பதில் பெயர் பெற்றவர். அவர் விதிக்கும் தண்டனைகளும், தண்டனை முறைகளும் அதைவிட பிரபலமானவை.
தனது மாமனாரையே கனரக கலிபர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றவர்.
அந்தவகையில் தற்போது, அவர் விதித்துள்ள தண்டனைக்கான காரணமும் வைரலாகி வருகிறது.
கிம் ஜாங் உன்னின் தந்தையும், முன்னாள் ஜனாதிபதிமான கிம் ஜாங் இல்லின் 10ஆம் ஆண்டு நினைவு நாள், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கடைபிடிக்கப்பட்டது. அவர் இறந்து 11 நாட்களுக்கு பின் தான் இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டன.
இதனால், அந்த 11 நாட்களும் வடகொரிய மக்கள் சிரிக்க, மது அருந்த, கேளிக்கைகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.
தந்தையின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. அவரது மறைவிற்கு பின், அந்நாட்டில் ‘பெகோனியாஸ்’ வகை மலர்களுக்கு அவரின் நினைவாக ‘கிம்ஜாங்கிலியா’ என பெயரிடப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதியின் பிறந்தநாளை முன்னிட்டு, அவ்வகை மலர்களை அரசு தோட்டத்தில் நேற்று அதிகம் மலரச்செய்ய வேண்டும் என, ஜனாதிபதி கிம் ஜாங் உன் உத்தரவிட்டு இருந்தார்.
ஆனால் அவர் கூறியதுபோல் மலர்கள் நேற்று மலர வாய்ப்பில்லை என்பது உறுதியானது. இதையடுத்து, மேற்பார்வையாளர் உள்ளிட்ட தோட்ட தொழிலாளர்கள் அனைவருக்கும், ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.