இலங்கைகை பாடாய்ப்படுத்தும் மே.இ.தீவுகளின் பருமனான வீரர்!

Date:

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்டின் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 268/8 என்ற ஸ்கோருடன், 99 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இலங்கையின் சுரங்க லக்மல் 5 விக்கெட் வீழ்த்தி மேற்கிந்தியத் தீவுகளின் நடுவரிசையை உடைத்த போதும், சுழற்பந்து வீச்சாளரான சற்றே பருமனான வீரரான ராகீம் கார்ன்வால் அந்த அணியை தூக்கி நிறுத்தியுள்ளார். அவர் ஆட்டமிழக்காமல் 60 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

ஜோசுவா டா சில்வாவுடன் எட்டாவது விக்கெட்டுக்கு 90 ஓட்டங்களை அவர் பகிர்ந்தது, ஆட்டத்தில் திருப்புமுனையாக அமைந்துள்ளது. 2ஆம் நாள் ஆட்டம் முடிவதற்கு சிறிது முன்பாக, 124 பந்துகளில் 46 ரன்கள் எடுத்திருந்த விக்கெட் காப்பாளர் ஜோசுவா டா சில்வா ஆட்டமிழந்தார்.

சுரங்க லக்மல் 45 ஓட்டங்களிற்கு 5 விக்கெட், துஷ்மந்த சமீர 71 ஓட்டங்களிற்கு 2 விக்கெட் வீழ்த்தினர்.

போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற மேற்கிந்தியத்தீவுகள் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. இலங்கை முதலில் ஆடி, முதல்  நாளிலேயே 70 ஓவர்களில் 169 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

புதிதாக நியமிக்கப்பட்ட மேற்கிந்தியத்தீவுகள் அணித் தலைவர்  ஜேசன் ஹோல்டர் 27 ஓட்டங்களிற்கு 5 விக்கெட் வீழ்த்தினார்.

இலங்கை சார்பில், லஹிரு திரிமன்ன 70 ஓட்டங்களும், நிரோஷன் டிக்வெல்ல 32 ஓட்டங்களும் பெற்றனர்.

போட்டியின் மூன்றாம் நாள் இன்றாகும். இலங்கை நேரம் இரவு 7.30 மணிக்கு ஆட்டம் தொடங்கும்.

spot_imgspot_img

More like this
Related

திருடச் சென்ற வீட்டில் குறட்டை விட்டு தூங்கிய திருடன்

ரத்தனபிட்டிய பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்த திருடன் ஒருவன், உள்ளே...

ஹோர்முஸைத் திறக்கும் திட்டம் குறித்து அமெரிக்காவின் பதில் செவ்வாய்க்கிழமை வரும் – ஈரான் வெளியுறவு அமைச்சர்

ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பது குறித்த தெஹ்ரானின் முன்மொழிவுக்கு, அமெரிக்காவிடமிருந்து செவ்வாய்க்கிழமையன்று அதிகாரப்பூர்வமான...

அரச வாகனத்தை பயன்படுத்திய வழக்கில் முன்னாள் அமைச்சர் பௌசிக்கு ரூ.66 இலட்சம் அபராதம்!

அனர்த்த முகாமைத்துவ அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், நெதர்லாந்து அரசாங்கத்தால் அனர்த்த முகாமைத்துவ...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்