ஜப்பானில் 50 வயது ஆண் ஒருவர், பேஸ் ஆப், போட்டோஷாப்பை பயன்படுத்தி, இளம் பெண்ணாக பைக்குகளுடன் போட்டோ எடுத்து வெளியிட அது வைரலானது. அவரது அழகில் சொக்கி நின்ற ரசிகர்களுக்கு, நிஜத்தில் அவர் 50 வயதான ஆண் என தெரிந்ததும் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கின்றனர்.
கிட்டத்தட்ட அனைத்து இன்ஸ்டாகிராம் பயனர்களும், தங்களை மேலும் அழகாக காட்டிக் கொள்ள, முகத்தை அழகாக மாற்றும் ஆப்களை பயன்படுத்துவர்.
ஆனால் இங்கே தன்னை பெண் ‘பைக்கர்’ என அறிமுகப்படுத்தி- அழகான பெண் என எல்லோரும் ஜொள்ளுவடித்த நிலையில்- உண்மையில், அவர் 50 வயதான ஆண் என்பது தெரிய வந்துள்ளது.
அவர், தன்னை பெண்ணாக மாற்றி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதனால், அவரை சமூக வலைதளங்களில் பின்பற்றும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.
ஜப்பானில் பிரபல பெண் மோட்டார் பைக்கராக தன்னை usazusagakuyuki என்ற பெயரில் டுவிட்டரில் அறிமுகம் செய்த கொண்ட ஒருவர், மோட்டார் பைக்குகளுடன் விதவிதமாக போஸ் கொடுத்து போட்டோக்களை பகிர்ந்து வந்திருக்கிறார். அவரது அழகில் சொக்கிய அவரை பலர் பின்தொடர்கிறார்கள்.
எல்லாம் சரியாக சென்று கொண்டிந்த போது, அவர் பகிர்ந்த புகைப்படத்தின் பின்னால் இருக்கும் ஒரு கண்ணாடியில், அவரது உண்மையான தோற்றம் தெரிந்துள்ளது. இதனை கவனிக்காமல் அவர் அந்த புகைப்படத்தை பகிர, நெட்டிசன்களின் கண்களில் அது தப்பிவில்லை.
ஒருவர், இது ஒரு நடுத்தர வயது நிரம்பிய ஆண் என பதிவிட, அப்போது தான் அவரது சுயரூபத்தை இந்த உலகம் அறிந்திருக்கிறது. இதனால் அவர் தலைப்பு செய்திகளில் இடம்பெறும் அளவுக்கு பிரபலம் அடைந்திருக்கிறார்.
இதுகுறித்து பேசிய இளம்பெண்ணாக போஸ் கொடுத்த 50 வயது நிரம்பிய நபர், “என் அடையாளத்தை மாற்ற போட்டோஷாப் மற்றும் பேஸ் ஆப்களை பயன்படுத்தினேன்“ என கூறியிருக்கிறார்.
みなさーん٩( ˆoˆ )۶
おバイクしてますかぁ✨💖
もうすぐ春ですよ🌷🌼🌸
年齢:昭和の○○○
身長:166
住み:イバラキ🍠
大好き:バイクいじり😘
一言: Life is once, play this world#バイク乗りと繋がりたい #バイク乗りとして軽く自己紹介 pic.twitter.com/t28mZmJ4vg— 宗谷の蒼氷 (@azusagakuyuki) February 10, 2021
தோள்பட்டை வரை முடி வளர்த்திருக்கும் அந்த நபர், சமூக வலைதளங்களில் தனக்கு லைக்ஸ்கள் அதிகம் விழ வேண்டும் என்பதற்காக இவ்வாறு நடந்து கொண்டதை அறிந்த நெட்டிசன்கள் நொந்து போய் உள்ளனர். இவரை பார்த்தா இவ்வளவு நாள் சொக்கி போய் இருந்தோம் என புலம்பி வருகின்றனர்.