Pagetamil
இலங்கை

இந்திய பிரதமர் விரைவில் இலங்கை விஜயம்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்பதற்காக மோடி இலங்கைக்கு வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கையுடனான தனது உறவை மேலும் வலுப்படுத்தும் இந்தியாவின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த விஜயங்கள் பார்க்கப்படுகின்றன.

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோர் புதுடில்லிக்கான தனித்தனியான விஜயங்களை முடித்துக்கொண்டுள்ளனர்.

தொடர் பேச்சுக்களுக்காக பசில் ராஜபக்ச மீண்டும் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

திங்கட்கிழமை வெளிவிவகார அமைச்சர் ஜி. எல். பீரிஸுடனான சந்திப்பைத் தொடர்ந்து, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ட்வீட்டரில், இலங்கையை வலுப்படுத்தும் பொருளாதார மற்றும் முதலீட்டு முயற்சிகள் குறித்து அவர்கள் விவாதித்ததாகவும், இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான கூடுதல் நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

மீனவர்கள் விவகாரம் தொடர்பாக இருதரப்பும் கருத்துகளை பரிமாறிக்கொண்டதுடன், இருதரப்பு வழிமுறைகள் விரைவில் சந்திக்க வேண்டும் என்றும் ஒப்புக்கொண்டனர்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மனுஷ நாணயக்காரவின் சகோதரர் கைது

Pagetamil

ஊடகவியாளர் தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதலுக்கு சமத்துவக் கட்சி கண்டனம்

Pagetamil

எரிபொருள் திருடிய குற்றச்சாட்டில் நால்வர் கைது

east tamil

தமிழ் பேசுவோரின் முறைப்பாடுகளை ஆங்கில மொழியில் முன்வைக்கமுடியும்!

east tamil

யோஷித்தவுக்கு குற்றப் புலனாய்வினரால் அழைப்பு

east tamil

Leave a Comment