28.7 C
Jaffna
December 21, 2024
Pagetamil
மலையகம்

மஸ்கெலியாவில் ஆலயத்துடன் தொடர்புடைய 11 பேருக்கு தொற்று!

மஸ்கெலியா சுகாதார மருத்துவ அலுவலர் அலுவலக பகுதிக்குட்பட்ட
மஸ்கெலியா நகரத்தைச் சேர்ந்த 11 பேர் நேற்று (21) கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட 11 பேரும் மஸ்கெலியாவிலுள்ள சைவ ஆலயத்துடன் தொடர்புடையவர்கள்.

அந்த ஆலயத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த ஒருவர், திடீரென நோய்ப்பட்ட நிலையில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

அதையடுத்து நடத்தப்பட்ட பரிசோதனையில் ஆலய பூசகர் தொற்றிற்குள்ளானார். அவருடன் தொடர்பிலிருந்த 35 பேரிடம்  நடத்தப்பட்ட பிசிஆர் சோதனையில் 11 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

சைவ ஆலயமும், மஸ்கெலிய நகரிலுள்ள 4 கடைகளும் பூட்டப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஹட்டனில் தனியார் பஸ் விபத்து!

east tamil

தலை, கால்கள் வெட்டப்பட்ட நிலையில் சிறுத்தையின் உடல்

east tamil

விபத்தையடுத்து இ.போ.ச சாரதி, நடத்துனரை தாக்கிய கும்பல்

Pagetamil

தந்தையின் முன்பாக விபத்தில் பலியான மாணவி

Pagetamil

கண்டியில் வாகன விபத்து – பாடசாலை மாணவி உயிரிழப்பு

east tamil

Leave a Comment