Pagetamil
இலங்கை

அத்துமீறும் இந்திய மீனவர்களிற்கு எதிராக போராட்டம்!

அத்துமீறும் இந்திய மீனவர்களுக்கு எதிராக யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு மீனவர்கள் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வடமராட்சி சுப்பர்மடம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களின் மீன்பிடி உபகரணங்கள் இந்திய மீனவர்களால் சேதமாக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று காலை வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே கடந்த நான்கு நாட்களுக்கு முன்னதாக இந்திய மீனவர்கள் படகினால் மோதி கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு வந்த ஆழியவளை மீனவர்களில் ஒருவரின் சடலம் இன்று கரையொதுங்கியுள்ளது.

இதனையடுத்து வடமாட்சி கிழக்கு மற்றும் வடமராட்சி மீனவர் சங்கப் பிரதிநிதிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபடுமாறு தத்தமது மீனவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

பல வழிகளிலும் போராடிய தமக்கு எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை என்றும் தீர்வு வரும்வரை வடமராட்சி மற்றும் வடமராட்சி கிழக்கின் அனைத்து வீதிகளையும் முடக்கி போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ள நிலையில் வடமராட்சி, வடமராட்சி கிழக்குப் பகுதிகள் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மீனவர்கள் வீதிகளின் குறுக்கே படகுகளை போட்டுள்ளதுடன் பொதுப் போக்குவரத்து முற்றாக செயலிழந்துள்ள நிலையில் போக்குவரத்தை வழமைக்கு கொண்டு வரும் முயற்சியில் பொலிசாரும் இராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நாளை முதல் விசேட போக்குவரத்து நடவடிக்கை

Pagetamil

பிரித்தானியர் ஒருவரால் வந்த வினை: இலங்கையில் பேராபத்தாக உருவெடுத்துள்ள ஆபிரிக்க நத்தைகள்!

Pagetamil

2025 ஆம் ஆண்டின் பொது விடுமுறை நாட்களின் விபரம்!

Pagetamil

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த சீன கடற்படையின் மருத்துவ கப்பல்

east tamil

தலைவன் பிறந்த ஊர் என்பதால் நிராகரிப்பா?: வல்வெட்டித்துறை மக்கள் போராட்டம்!

Pagetamil

Leave a Comment