யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளார்.
இலங்கை முழுவதும் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில், வடக்கிலும் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தற்போது, யாழ் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளார்.
இதேவேளை, வடமாகாணசபையில் முன்னாள் உறுப்பினர் கே.சயந்தனும் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளார். அவர் தற்போது சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மக்கள் சுகாதார விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1