யாழ் மாநகரசபையின் ஏற்பாட்டில் முத்தமிழ் விழா!

Date:

யாழ் மாநகர சபையின் ஏற்பாட்டில் முதன்முறையாக முத்தமிழ் விழா இன்றைய தினம் காலை 8.30 மணியளவில் நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் ஆரம்பமானது.

நிகழ்வின் ஆரம்பத்தில் தமிழ் கலாசார விழுமியங்களை பிரதிபலிக்கும் வகையில் மேள தாள வாத்தியங்கள் முழங்க, பொய்க்கால் குதிரையாட்டம் மயிலாட்டம், கோலாட்டம் என்பனவற்றுடன் விருந்தினர்கள் யாழ் மாநகர சபை முன்றலில் இருந்து நிகழ்வு மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

இதன்போது யாழ் மாநகர சபையால் இயல்துறைக்கான அரசகேசரி விருது கவிஞர்.சோ.பத்மநாதனுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டார். இந்த அமர்வில் கம்பவாரிதி இ.ஜெயராஜ் குழுவினரின் வழக்காடு மன்றம் விசேட அம்சமாக அமைந்துள்ளது.

ஐபிசி தமிழின் அனுசரணையில் காலை முதல் இரவு வரை இயற்துறை, இசைத்துறை, நாடகத்துறை என மூன்று அமர்வுகளாக நிகழ்ச்சிகளை நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் இயற்துறை அமர்வு ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

spot_imgspot_img

More like this
Related

நாவிதன்வெளியில் அதிகரிக்கும் காட்டு யானை அச்சுறுத்தல்: சிறுவன் மீது தாக்குதல்!

அம்பாறை மாவட்டம், நாவிதன்வெளி மற்றும் அதனை அண்டிய நற்பிட்டிமுனை, கிட்டங்கி ஆகிய...

அனோஜன் விவகாரத்தை ஞானசாரருடன் இணைக்க முற்படும் நாமல்

சிறைக்காவலிலிருந்து நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ,...

மஹிந்த மனைவி கைது!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தால் கைது செய்யப்பட்ட முன்னாள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்