டென்னிஸ் உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள நோவாக் ஜோகோவிச், அவுஸ்திரேலியாவில் நான்காவது நாளாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அவரது விசா விண்ணப்பத்தை இரத்து செய்யும் முடிவுக்கான விளக்கத்தை அவுஸ்திரேலியத் தரப்பு சட்டத்தரணிகள் தயார் செய்துள்ளனர்.
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் கலந்துகொள்ள செர்பியாவிலிருந்து மெல்பர்ன் சென்ற ஜோகோவிச் அகதிகளைத் தங்கவைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஹோட்டல் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அவரது விசா விண்ணப்பம் மறுக்கப்பட்ட முடிவுக்கு அவர் சட்ட ரீதியாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
ஜோகோவிச் தடுத்துவைக்கப்பட்டுள்ள அதே ஹோட்டலில் தங்க வைக்கப்பட்ட செக் குடியரசு டென்னிஸ் வீராங்கனை ரெனாட்டா வொராகோவாவின் விசா விண்ணப்பம் இரத்து செய்யப்பட்ட பிறகு அந்த முடிவை எதிர்க்காமல் அவுஸ்திரேலியாவை விட்டு அவர் சென்றதாக செக் குடியரசின் வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
ஜோகோவிச்சின் விவகாரம் திங்கட்கிழமை (10) விசாரணைக்கு வரவுள்ளது.
அவர் அவுஸ்திரேலியாவில் நுழைவதற்கான அனைத்து உத்தரவாதங்களையும் வழங்க செர்பிய அரசாங்கம் தயாராய் உள்ளதாக என்று அந்நாட்டுப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மறுத்த ஜோகோவிச், மருத்துவ விலக்கு பெற்று அவுஸ்திரேலியா ஓபனில் பங்கேற்க அவுஸ்திரேலியா வந்த போது, தடுத்து நிறுத்தப்பட்டார்.
அவுஸ்திரேலிய அரசின் முடிவிற்கு எதிராக, ஜோகோவிச் நீதிமன்றத்தை நாடியுள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை நடந்த வழக்கு விசாரணையில்-
ஜோகோவிச்சுக்கு டிசம்பர் 16ஆம் திகதி கொரோனா தொற்று ஏற்பட்டது. பயணம் மேற்கொள்வதற்கு முன்னர் அவருக்கு எந்த உடல்நலப்பிரச்சினைகளும் இல்லை. ஆஸ்திரேலிய பொதுவிருது டென்னிஸ் போட்டியில் கலந்துகொள்ள ஜோக்கோவிச் செர்பியாவிலிருந்து மெல்பர்ன் வந்தார்.
நாட்டிற்குள் வந்த பிறகு ஜோகோவிச்சின் விசா அனுமதி ரத்து செய்யப்பட்டது. அவர்
தடுப்புக்காவல் நிலையத்தில் வைக்கப்பட்டார் என, அவர் தரப்பு சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.