25.6 C
Jaffna
January 7, 2025
Pagetamil
சினிமா

இயக்குனர் ஹரி திடீர் உடல்நல குறைவினால் வைத்தியசாலையில் அனுமதி!

இயக்குனர் ஹரி, உடல் நலக்குறைவினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தன் மைத்துனர் அருண் விஜய்யை வைத்து ஏவி 33 படத்தை இயக்கி வருகிறார் ஹரி. அண்மையில் தான் பூஜை போட்டு படப்பிடிப்பை துவங்கினார்கள். பூஜையில் விஜயகுமார், அருண் விஜய், அவரின் மகனை சேர்ந்து பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

முதல்கட்ட படப்பிடிப்பை பழனியில் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் ஹரிக்கு கடுமையான காய்ச்சல் ஏற்படவே பழனியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏவி 33 படக்குழுவை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து படக்குழுவை சேர்ந்த அனைவருக்கும் சோதனை செய்யப்பட்டுள்ளது.

ஹரிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்று பரிசோதனை செய்தபோது நெகட்டிவ் என ரிசல்ட் வந்திருக்கிறது. ஏவி 33 படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ப்ரியா பவானிசங்கர் நடித்து வருகிறார்.

முன்னதாக சூர்யாவை வைத்து படம் பண்ணுவதாக இருந்தார் ஹரி. ஆனால் அது நடக்காமல் போகவே அருண் விஜய் படத்தை இயக்கி வருகிறார்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இதனால் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. படக்குழுவினர் என்ன தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க முடியவில்லை.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கார் பந்தய பயிற்சியின் போது விபத்தில் சிக்கிய அஜித்

Pagetamil

வாழ்க்கையை சீரழித்து விட்டார்: இயக்குனர் மீது நடிகை புகார்

Pagetamil

“நான் சினிமாவுக்குள் வந்ததே சிலருக்கு பிடிக்கவில்லை” – சிவகார்த்திகேயன்

Pagetamil

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ ஏப்ரல் 10இல் ரிலீஸ்

Pagetamil

நடிகர் விஷாலுக்கு உடல்நல பாதிப்பு – பிரச்சினை என்ன?

Pagetamil

Leave a Comment