அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் கலந்துகொண்ட செக் குடியரசு டென்னிஸ் வீராங்கனை ரெனாட்டா வொராகோவாவை அவுஸ்திரேலியா தடுத்துவைத்துள்ளது.
நோவாக் ஜோக்கோவிச் போலவே COVID-19 தடுப்பூசி போட்டுக்கொள்வதிலிருந்து மருத்துவரீதியாக விலக்களிக்கப்பட்டோர் அதிகாரிகளால் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
இரட்டையர் ஆட்டத்தில் சிறந்து விளங்கும் ரெனாட்டா வொராகோவா இவ்வாரத் தொடக்கத்தில் மெல்பர்னில் விளையாடினார்.
எல்லைப் படை அதிகாரிகளால் தடுத்துவைக்கப்பட்டபிறகு அவர் அவுஸ்திரேலியாவைவிட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.
அந்த முடிவிற்கு அவர் எதிர்ப்புத் தெரிவித்தாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
டென்னிஸ் வீரர் ஜோக்கோவிச், மற்றொரு விளையாட்டு அதிகாரி ஆகியோர் மருத்துவ விலக்கு விவகாரத்தில் சர்ச்சையாகி, ஹொட்டலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதில், விளையாட்டு அதிகாரி அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.
பயிற்சிக்கான வாய்ப்புகள் குறைவாக இருந்ததால் வொராகோவா போட்டியிலிருந்து வெளியேறி அவுஸ்திரேலியாவை விட்டுச்செல்ல முடிவு செய்துள்ளார்.
ஜோக்கோவிச் தடுத்துவைக்கப்பட்டுள்ள அதே ஹோட்டலில் வொராகோவா தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளார்.
அவர் தற்போது இரட்டையர் பிரிவு தரவரிசையில் 81 வது இடத்திலும், ஒற்றையர் பிரிவில் 74வது இடத்திலும் உள்ளார்.