மனைவியை திருப்திப்படுத்த நகைக்கொள்ளையில் ஈடுபட்ட இளைஞர் ஒருவரை, வவுனியா குற்றத்தடுப்பு பொலிசார் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம், கோண்டாவிலை சேர்ந்த 30 வயதான ஒருவரே கைதாகியுள்ளார்.
சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர், வவுனியா வடக்கு நெடுங்கேணியில் வீடொன்றில் பத்திரிகை படித்துக் கொண்டிருந்த பெண்ணிடம், ஒருவர் குடிதண்ணீர் கேட்டுள்ளார்.
அந்தப் பெண் குடிதண்ணீர் கொடுத்த போது, அவர் அணிந்திருந்த இரண்டரை பவுண் தங்க நகையை அறுத்துக் கொண்டு தப்பியோடியுள்ளார்.
இது தொடர்பில் விசாரணை நடத்தி வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார், கோண்டாவிலை சேர்ந்த 30 வயதான ஒருவரே திருட்டில் ஈடுபட்டார் என்பதை கண்டறிந்தனர்.
அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மனைவியின் ஆசையை நிறைவேற்றவே திருட்டில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் திருமணம் செய்ததாகவும், நிரந்தர வருமானமின்றி திண்டாடிய நிலையில், மனைவி நகை அணிய ஆசைப்பட்டதாகவும், மனைவியின் ஆசையை நிறைவேற்ற திருட்டில் ஈடுபட்டதாகவும் கைதானவர் தெரிவித்துள்ளார்.